ராக்கெட் டிரைவர் விமர்சனம்… வில்லேஜ் விஞ்ஞானி
ராக்கெட் டிரைவர் விமர்சனம்… வில்லேஜ் விஞ்ஞானி
ஸ்டோரி…
விஞ்ஞானியாக ஆசைப்படும் விஷ்வத் தனது ஏழ்மை காரணமாக ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.. இவர் மீது அக்கறை காட்டும் ட்ராபிக் போலீஸ் ஆக நாயகி சுனைனா..
ஒருநாள் இவரது ஆட்டோவில் இளம் வயது ஏபிஜே அப்துல் கலாம் சவாரிக்கு வருகிறார்.
அப்துல் கலாம் எப்படி இந்த வயதில் அதுவும் தற்காலத்தில் என்ற பலருக்கு கேள்வி எழலாம்? அவர் டைம் டிராவல் செய்து வந்திருப்பதே கதையின் நோக்கம்..
ஆனால் அவர் ஏன் ஏன் டைம் ட்ராவல் செய்து வந்திருக்கிறார் என்பது அவருக்கே குழப்பம்.. தான் வந்திருப்பதன் நோக்கம் என்ன? என்பதை அறிந்து கொள்ள அந்தக் கால நண்பர்களுடன் கலந்து ஆலோசிக்க திட்டமிட்டு பயணிக்கிறார் கலாம்.
தன் சிறுவயதில் தான் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற விஷயம் தெரிய வருகிறது..
அதன் பிறகு என்ன நடந்தது.? வாக்குறுதியை நிறைவேற்றினாரா? டைம் ட்ராவல் நோக்கம் நிறைவேறியதா.? என்பதெல்லாம் நீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
முதன்மை கதாபாத்திரத்தில் விஸ்வத் நடித்திருக்கிறார்.. கவனிக்கத்தக்க நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார்.. சுனைனா போலீசாக ஜொலிக்கிறார்..
சிறுவயது கலாமாக நடித்திருக்கும் நாகவிஷால் மற்றும் கலாமின் நண்பராக நடித்திருக்கும் காத்தாடி ராமமூர்த்தி இருவரும் சிறப்பான நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொள்கிறார்கள்.
அப்துல் கலாமின் நண்பராக சாஸ்திரியாக நடித்திருக்கும் காத்தாடி ராமமூர்த்தியின் கேரக்டர் படத்திற்கு பெரிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.
இளம் வயது அப்துல் கலாமாக நடித்திருக்கும் நாகா விஷாலின் நடிப்பை பாராட்டாமல் இந்த விமர்சனத்தை முடிக்க முடியாது.. படத்திற்கு பெரும் பலத்தை அவரது கேரக்டர் கொடுத்து இருக்கிறது..
டெக்னீசியன்ஸ்…
இயக்குநர் ஸ்ரீராம் ஆனந்தசங்கர்.. ஒரு பேண்டஸி திரில்லருக்கான கதையை இயக்குனர் அமைக்க முடிவு செய்திருப்பதற்காகவே அவரை பாராட்டலாம்.. அதிலும் இந்திய மக்களால் அதிக நேசிக்கப்படும் அப்துல் கலாம் கேரக்டர் வைத்து கதையை நகர்த்தி இருப்பது எதிர்பார்ப்பை எகிறச் செய்யும்..
ஆனால் கதையை சொன்ன விதத்திலும் கதையின் பட்ஜெட்டிலும் குறை வைத்திருப்பது ஏமாற்றமே..
இசையமைப்பாளர் கெளஷிக் கிரிஷ், ஒளிப்பதிவாளர் ரெஜிமெல் சூர்யா தாமஸ், படத்தொகுப்பாளர் இனியவன் பாண்டியன் ஆகியோரது பணி படத்தை தாங்கியிருக்கிறது.
ஆக ராக்கெட் டிரைவர்.. அறிவியல் ஓட்டுநர்
Rocket driver movie review

