‘கருப்பு’ படத்தை தொடர்ந்து ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ₹200 கோடி வசூல்..; குஷியில் சூர்யா ரசிகர்கள்

‘கருப்பு’ படத்தை தொடர்ந்து ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ₹200 கோடி வசூல்..; குஷியில் சூர்யா ரசிகர்கள்

 

‘கருப்பு’ படத்தை தொடர்ந்து ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ₹200 கோடி வசூல்..; குஷியில் சூர்யா ரசிகர்கள்

 

எல்லா நடிகர்களுக்கும் வெற்றி தோல்வி என்பது சகஜம். ஆனால் சமீபத்தில் சூர்யாவின் சில படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது.. முக்கியமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கங்குவா’ படுதோல்வி அடைந்தது.

அதன் பிறகு வெளியான சூர்யாவின் ரெட்ரோ படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை..

இதற்கு முன்பு வெளியான ‘சூரறைப் போற்று & ஜெய் பீம்’ உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் என்றாலும் இந்த இரண்டு படங்களும் ஓடிடியில் மட்டுமே ரிலீஸ் ஆனது.

இதனால் பெரிய திரையில் பெரிய வெற்றிக்காக சூர்யா ரசிகர்கள் காத்திருந்தனர்..

நூறு நாட்களுக்கு முன்பு வெளியான சூர்யாவின் கருப்பு திரைப்படம் ₹ 300 கோடிக்கு மேல் வசூலித்தது.. இதனால் சூர்யா தரப்பில் உற்சாகம் அடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வந்த ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

முக்கியமாக குடும்பங்கள் மத்தியில் இந்த படத்திற்கு அமோக ஆதரவு கிடைத்தது.

இந்த நிலையில் தற்போது ₹ 200 கோடி வசூலை படம் கடந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்து போஸ்டர் வெளியிட்டுள்ளனர்..

வரும் நாட்களில் இன்னும் வசூல் அதிகரிக்கும் என்றும் பட குழுவினர் காத்திருக்கின்றனர்..

 

சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’.

ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படத்தில் சூர்யா, மமீதாபைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டான்டன், மரியம் சார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்..

 

Suryas Vishwanath And Sons collected 200 cr and running successfully