மக்கள் பிரச்சனையை அரசுக்கு கொண்டு செல்வோம்… ரஜினி ₹1 கோடி கொடுப்பார்..; ‘மக்கள் மேடை’-யில் லதா ரஜினி பேச்சு
மக்கள் பிரச்சனையை அரசுக்கு கொண்டு செல்வோம்… ரஜினி ₹1 கோடி கொடுப்பார்..; ‘மக்கள் மேடை’-யில் லதா ரஜினி பேச்சு
தமிழர்கள் பயன்பெறும் வகையில் ‘மக்கள் மேடை’ அறிவித்திருந்தார் லதா ரஜினிகாந்த்.. அதனைத் தொடர்ந்து மக்கள் தங்கள் பிரச்சனையை தெரிவிக்க மக்கள் மேடை என்ற இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது…
இணையதளம் அறிமுகம் செய்து. லதா ரஜினி பேசும் போது… “இந்த மக்கள் சேவை இப்போதல்ல.. 45 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டது.. சமூக நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்.
இந்தியாவுக்கு ஒரு புதிய கல்வி முறையை தொடங்கியுள்ளோம்… நமக்கு உணவளிக்கும் விவசாயிகள் நன்றாக இருந்தால்தான் நாடும் மக்களும் நன்றாக இருக்கும்” என்றார்.
அதன் பின்னர் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவர்களை பார்த்து அவர்களது ஊர் பிரச்சனைகளை பற்றி பேசிக் கொண்டிருந்தார்.. குளம் வெட்டுதல் மூலம் நீர் ஆதாரங்களை பெருக்குதல் உள்ளிட்டவைகள் விவாதிக்கப்பட்டது..

அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட கும்பகோணத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் நாங்கள் ரஜினிக்காக இதுவரை பல ஆண்டுகளாக காத்திருக்கிறோம்.. வீட்டில் பல பிரச்சினைகள் இருந்தாலும் தலைவர் வழியில் நடந்து வருகிறோம்.. இப்போது உங்களது அமைப்பில் இணைந்துள்ள நீங்கள் கும்பகோணத்திற்கு வர வேண்டும்.. ” என்று கோரிக்கை விடுத்தனர்..
மேலும் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார் லதா ரஜினி.. அப்போது இப்போது தமிழ்நாட்டில் பேசப்படும் காவிரி மேகதாது நீர் பிரச்சனை குறித்து பேசப்பட்டது..
நதிநீர் இணைப்பிற்கு ரஜினிகாந்த் சொன்னபடி ஒரு கோடி தருவாரா என்றும் கேட்கப்பட்டது… அதற்கு பதில் அளிக்கும் போது அவர் 2002 ஆம் ஆண்டு நதிநீர் இணைப்புக்காக ஒரு கோடி தருவதாக தெரிவித்திருந்தார்.. தற்போது அரசு அந்த திட்டத்தை முன்னெடுக்கும் போது நிச்சயம் அவர் தருவார் என்று பதிலளித்தார் லதா ரஜினி…
தன் ‘மக்கள் மேடை’ முயற்சிக்கு அவரின் ஆதரவு எப்போதும் உள்ளது ஆதரவை விட அவரது ஆசி கண்டிப்பாக இருக்கிறது.. என்று தெரிவித்திருந்தார் லதா ரஜினி..

மக்கள் மேடை மூலம் மக்களின் பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுமா என்ற கேள்விக்கு
“இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை. மக்கள் பிரச்னைதான் அரசாங்க பிரச்னை. அரசாங்கத்திடம் கொண்டு சேர்க்க வேண்டிய நிலைமை வந்தால், அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்” என்று தெரிவித்தார் லதா ரஜினிகாந்த்…
Latha Rajini launches Makkal Medai website It will take Peoples problem to Govt

