லவ் ஓ லவ் விமர்சனம் 3.5/5… ஆண்கள் உலகத்திற்குள் நுழைந்த பெண்
லவ் ஓ லவ் விமர்சனம் 3.5/5… ஆண்கள் உலகத்திற்குள் நுழைந்த பெண்
ஸ்டோரி…
கே எஸ் ரவிக்குமாரின் மகன் பவிஷ்.. இவருக்கு ஒரு தங்கை உண்டு.. ஒரு தனியார் நிறுவனத்தில் 40 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்து வருகிறார் பவிஷ்.. ஐடி துறையில் வேலை செய்யும் ஹீரோயின் நாக துர்காவுடன் காதல் கொள்கிறார்..
நாக துர்கா ஓர் ஆடம்பர பெண்மண.. தனக்கு அது வேண்டும் இது வேண்டும் என காஸ்ட்லியான பொருட்களை வாங்கி கேட்கிறார்.. காதலிக்காக விலை உயர்ந்த மூன்று லட்ச ரூபாய் பைக்கை வாங்கினார்.. நண்பர்களிடம் கடன் கேட்கிறார்.. அதுவும் போதவில்லை என்பதால் கிரெடிட் கார்டு உள்ளிட்டவைகளை வாங்கி கடன் மேல் கடனில் சிக்கி தவிக்கிறார்..
ஒரு நாள் நாகதுர்காவின் அம்மாவுக்கு தெரிந்து விடுகிறது.. ஒரு கடன்காரனுக்கு என் பெண்ணை கொடுக்க மாட்டேன் என்கிறார்..
அம்மாவின் சொல்படி காதலனை பிரிந்து செல்கிறார்.. ஆனாலும் பவிஷ் போல தனக்கு செலவு செய்து தன்னை பார்த்துக் கொள்ளும் ஒருவன் கிடைக்க மாட்டார் என்பதற்காக மீண்டும் தேடி வருகிறார்..
உன் காதலை நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் ஒரு கண்டிஷன்.. நான் நான்கு வருட காதலில் உனக்கு செய்ததை எல்லாம் நீ நான்கு மாத அவகாசத்தில் செய்து தர வேண்டும்.. அப்படி என்றால் உன்னை ஏற்றுக் கொள்கிறேன் என்கிறார்.
அதன் பிறகு நாக துர்கா என்ன செய்தார்.? ஆண்கள் செய்ததை எல்லாம் பெண்களால் செய்ய முடியுமா.? பவிஷின் சவாலை ஏற்றுக் கொண்டு ஜெயித்தாரா நாகதுர்கா?என்பதெல்லாம் சுவாரசியமான மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாராயண் நடித்துள்ள படம் ‘லவ் ஓ லவ்’.. மிடில் கிளாஸ் பையனின் எதார்த்த உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறார் பவிஷ்.. மிடில் கிளாஸ் ஆக இருந்தாலும் காதலில் சிக்கினால் அவனின் நிலை என்ன என்பதை இவரது கேரக்டர் உணர்த்துகிறது.. ஆட்டம் பாட்டம் ரொமான்ஸ் ஆக்ஷன் என அனைத்திலும் பட்டையை கிளப்பி இருக்கிறார் பவிஷ்..
ஆந்திராவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் நாகதுர்கா இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆகிறார்.. இன்ஸ்டாகிராம் மட்டும் போதுமா நடிப்பு வேண்டாமா.? கருப்பு சேலை கட்டிக்கொண்ட ரொமான்ஸ் காட்சியில் வெறுமனே டயலாக் பேசுவது போல உள்ளது.. டான்சில் உள்ள கவனத்தை நடிப்பிலும் காட்டலாமே…
இவர்களுடன் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..
தன் பையன் கடன் வாங்க மாட்டான்.. தனக்கு தெரியாமல் எதையும் செய்ய மாட்டான் என அதீத நம்பிக்கை வைக்கும் பொறுப்பான அப்பாவாக கேஸ் ரவிக்குமார்..
காதலர்களுக்குள் நடக்கும் காதலை ஈகோ மோதலை சொல்லும் விவாத மேடை போடா செல்வராகவன் வனிதா காட்சிகள்.. போலீசாக செல்வராகவன் மாதர் சங்கத் தலைவியாக வனிதா விஜயகுமார்..

டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவாளரின் மெனக்கடல் பாடல் காட்சிகள் நிறையவே தெரிகிறது.. அதுபோல கலை இயக்குனரும் ஒரு கோர்ட்டு போல அமைத்து ஒரு பாடல் காட்சியை ரசிக்க வைத்திருக்கிறார்..
இதில்.. நாலு வருஷம் நான் காதலுக்காக செஞ்சத நாலு மாசம் அவளால் செய்ய முடியுமா என்று பவிஷ் கேட்கிறார்.. காதலுக்காக பசங்க செய்றதையெல்லாம் பொண்ணுங்க நம்மளால செய்ய முடியாது என வனிதா கூறுவதாகவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது..
நாகதுர்காவின் தோழியாக வரும் திருநங்கை ஒரு காட்சியில்.. வேலை படிப்பு என்பது பெண்களுக்கான உரிமை.. ஆனால் ஆண்களுக்கு அதுதான் கடமை.. ஆண்களின் கடமை அவர்களிடம் கேட்காமல் திணிக்கப்படுகிறது.. ஆண் பெண் இருவரின் மனநிலையை என்னால் மட்டுமே சரிசமமாக புரிந்து கொள்ள முடியும் என்கிறார்.. இந்த வசனமும் அவரது கேரக்டரும் படத்திற்கு கூடுதல் பலம்..
தினேஷ் ராஜ் மற்றும் ஜி தனஞ்செயன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
பாக்ஸ்ன் என்ற பெயரில் வலம் வரும் இரு இசையமைப்பாளர்கள் இதற்கு இசையமைத்துள்ளனர்.. பின்னணி இசை சூப்பர்.. பாடல்களும் ஆட்டம் போட வைக்கிறது… வடிவேலு பாடி ஹிட்டடித்த வாடி பொட்ட புள்ள வெளியே என்ற ரீமிக்ஸ் பாடல் ரசிக்க வைக்கிறது..
அடுத்தடுத்த பாடல் வரவேண்டும் என்ற நினைப்பிலேயே பாடல்களை இயக்குனர் திணித்து விட்டாரோ.? ஓரிரு பாடல்களை எடிட்டர் தூக்கியிருக்கலாம்..
ஜென்சி கிட்ஸ்க்கு பிடித்த படமாக இந்த படம் உருவாகியுள்ளது.. வழக்கமாக காதல் படங்களில் காதலர்கள் எப்படி சந்தித்தார்கள் காதல் எப்படி உருவானது என்ற காட்சிகள் இருக்கும்.. ஆனால் இதில் எடுத்த எடுப்பிலேயே காதலில் உள்ள பிரச்சனை அவர்கள் வாழ்வியல் பொருளாதாரம் என அனைத்தையும் பிராக்டிக்கல் ஆக சொல்லியிருக்கிறார் இயக்குனர் மகேஷ்..
Pavish in Love Oh Love movie review
—

