முதற்கனல் விமர்சனம்.. போதைப் பாதை.. தலைவன் எவ்வழியோ மக்கள் அவ்வழியே.
முதற்கனல் விமர்சனம்.. போதைப் பாதை.. தலைவன் எவ்வழியோ மக்கள் அவ்வழியே..
ஸ்டோரி…
நாயகன் அஸ்வின் தந்தை.. தன்னுடன் படித்த பள்ளி தோழியை தேடி கிராமத்திற்கு செல்கிறார் அஸ்வின் தந்தை.. அங்கு சில நாட்கள் தங்க நேரிடுகிறது.. அப்போது பள்ளி தோழி செல்வியின் மகன் ராஜேஷ் அஸ்வினும் நண்பர்கள் ஆகின்றனர்..
ஒரு கட்டத்தில் கிராமத்தில் இருக்கும் போதை பழக்கத்திற்கு அடிமை ஆகிறார் அஸ்வின்.. சிட்டிக்கு வந்தாலும் அவரால் போதை பழக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார்.. வீட்டில் தந்தை பாக்கெட்டில் இருக்கும் பணத்தை திருடுகிறார் முதல் மாணவனாக இருந்த அவரது வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறது..
எனவே வீட்டை விட்டு ஓடி செல்கிறார்.. பல திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகிறார்..
அதன் பிறகு நடந்தது என்ன.? மீண்டும் அவரால் பழைய நிலைக்கு திரும்ப முடிந்ததா.? என்பதெல்லாம் நீதிக்கதை..

கேரக்டர் பெயர்.. – அசல் பெயர்
சூர்யா – அஸ்வின் விஸ்வநாதன்
பாண்டி – ராஜேஷ்
சங்கர் – ராமசாமி
சரஸ்வதி – தனுஜா
சுமா – இலக்கியா
ஜோசப் – அரி கரன்
தாஸ் – யோகேஷ்
ரமணா – ஆர்.வெங்கடரமணன்
ராஜேந்திரன் – டி.ராஜேந்திரன்
படத்தில் நடித்த அனைவரும் புது முகங்களே.. ஆனால் அதை திரையில் தெரியாத வண்ணம் தங்களால் முடிந்தவரை நடிப்பில் முதிர்ச்சி காட்டியுள்ளனர்..
நண்பர்கள் அஸ்வின் மற்றும் ராஜேஷ் இருவரின் நடிப்பில் நல்ல ஒரு மெச்சூரிட்டி.. போதை பழக்கத்திற்கு அடிமையான பின்னர் அவர்கள் வாழ்க்கையில் படும் கஷ்டங்களை எதார்த்தமாக காட்டியுள்ளனர்..

டெக்னீசியன்ஸ்…
இயக்குனர் – ஆர்.வெங்கடரமணன்
தயாரிப்பாளர் – ஆர்.போத்திராஜ்
ஒளிப்பதிவாளர் – கந்தசுவாமி கோபால்
பின்னணி இசை – மீரா லால்
எடிட்டர் – திஸ்யன் சாரதி
இணை இயக்குனர் – ஆர்.முத்துக்குமரன்
PRO: கே.எஸ்.கே.செல்வகுமார்
ஒளிப்பதிவு பின்னணி இசை ஆகியவை படத்தின் பட்ஜெட்டிற்கு ஏற்ப உள்ளது..
அப்பா வேணாம்பா என்ற படத்தை இயக்கியவர்தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. ஆர்.வெங்கடரமணன்
முதல் படத்திலேயே மதுவுக்கு எதிராக பாடம் கொடுத்திருந்தார்… இந்த படத்தில் போதை பழக்கத்தில் இருந்து மாணவர்கள் மீண்டு வர வேண்டும்.. அதற்கு அரசு முன்வந்து செயல்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்..
முக்கியமாக குற்றம் செய்பவர்களை விட குற்றம் செய்ய தூண்டுபவர்களை தண்டிக்க வேண்டும்… அவர்களை தண்டித்தால் பெரிய சமூக மாற்றம் ஏற்படும் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்..
அதாவது மாணவர்களை போதையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்றால் போதையை அரசாங்கம் முற்றிலும் ஒழிக்க வேண்டும்.. அப்படி என்றால் மட்டும்தான் மாற்றம் உருவாகும் என்பதை ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார்..
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல நமது சுய ஒழுக்கமும் முக்கியம் என பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தி அதற்கு ஏற்ப வசனங்கள் கொடுத்து படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்து இருக்கிறார்..
ஆத்துல கல் போட்டா நீர் வளையம் கரை சேரும்.. முயற்சி போட்டா கரை சேரும்…
எவனோ பணம் சம்பாதிக்க நம்ம புள்ளைய கெடுக்கறாங்க… நாசமா போங்கடா… என்ற வசனங்கள் கைத்தட்டல்களை பெறும்.
இந்த வாரம் வருகிற ஜூலை 10ஆம் தேதி இந்த படம் முதற்கன் திரையரங்குகளில் வெளியாக உள்ளது..
Mudharkanal movie review

