கட்டா குஸ்தி 2 விமர்சனம் 4.5/5.. காமெடி ஜாஸ்தி…
கட்டா குஸ்தி 2 விமர்சனம் 4.5/5.. காமெடி ஜாஸ்தி…
ஸ்டோரி…
கட்டா குஸ்தி முதல் பாகத்தில் விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா தம்பதிக்கு குழந்தை இருக்காது.. இதில் குழந்தை ஆறு வயது சிறுமி ஷாரா.. மனைவியை வேலைக்கு அனுப்பி விட்டு வீட்டு வேலை பார்த்துக் கொண்டு குழந்தையை பராமரிக்கும் பொறுப்பான கணவன் விஷ்ணு..
குஸ்தி வீராங்கனை ஐஸ்வர்யாவின் பயிற்சியாளர் கொடுத்த தப்பான அறிவுரையால் அவருக்கு ஒரு மருந்து கொடுத்து விடுகிறார் விஷ்ணு..
இதனால் குஸ்தி போட்டியில் தோற்றுவிடுகிறார் ஐஸ்வர்யா.. கணவன் மனைவி இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு விவகாரத்து வரை செல்கிறது..
அதன் பிறகு நடந்தது என்ன என்பதுதான் அல்டிமேட் காமெடி கலாட்டா..

கேரக்டர்ஸ்…
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, சாரா, கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், கஜராஜ், ஸ்ரீஜா ரவி, கருணாகரன், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர்.
கம்பீரமான தோற்றம் என்றாலும் காமெடி தனக்கு கைவந்த கலை என்பது போல விஷ்ணு விஷால் விளையாடி இருக்கிறார்.. குழந்தையை பார்த்துக் கொண்டு.. வீட்டு வேலைகளை செய்து.. ரீல்ஸ் போட்டு.. இப்படி ஒரு கணவர் நமக்கு கிடைக்க மாட்டாரா? என பெண்களை ஏங்க வைத்து விட்டார் விஷ்ணு..
குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் பாசமான அப்பா.. மனைவிக்கு பார்த்து பார்த்து செய்யும் கணவன்.. பிரச்சனை என்று வந்தால் வெளுத்துக்கட்டும் வீரன் என ஒவ்வொரு ஃபேமிலும் தெறிக்க விட்டுள்ளார் விஷ்ணு..
ஜாடிக்கேத்த மூடி போல விஷ்ணுக்கு ஏற்ற ஜோடியாக ஐஸ்வர்யா.. சம்பவக்காரி ஆட்டம் போட்டு சம்பவம் செய்திருக்கிறார்.. சேலை கட்டிக்கொண்டு ஐஸ்வர்யா போடும் குஸ்தி ரசிகர் கண்களுக்கு குஷி தீ..
ஐஸ்வர்யாவுக்கு அழகிலும் நடிப்பிலும் போட்டியாக மீனு டீச்சர் மோக்க்ஷா.. மலையாளம் தெரியாத ரசிகர்களுக்கும் இவர்களின் பாஷை மனசிலாகி விடும்.. அப்படி போடு அப்படி போடு பாட்டில்.. இந்த ஆட்டம் போதுமா.? இனி த்ரிஷாவை விட மோக்க்ஷாவே நம் கண் முன் நிற்பார்..

செல்லக்குட்டி ஷாரா இனி தமிழகத்தின் தங்க கட்டி என்ற சொல்லும் அளவுக்கு நடிப்பில் வெளுத்துக்கட்டி இருக்கிறார்.. விவகாரத்துக்கு அப்பா அம்மா விருப்பத்தை விட குழந்தைகள் விருப்பம் முக்கியம் என்று இவர் சொல்லும்போது நம்மை அறியாமல் கைதட்டுவோம்..
முனீஸ்காந்தை பார்த்து.. உங்கள ட்ரெய்னிங் கொடுக்க அனுப்பல.. எனக்கு ஆயா வேலை பார்க்க சொன்னாங்க.. உளிப்பட்ட சிற்பம் உருவாகும் உங்க மேல உளியே படல போல என்று ஷாரா கலாய்க்கும் போது சிரிப்பை கண்ட்ரோல் செய்ய முடியல..
கருணாஸ் மனைவி லிசி கார் ஓட்டும்போது இவ எப்பயா வண்டி ஓட்ட கத்துக்கிட்டா.. இவளுக்கு ஹிந்தி வேற தெரிஞ்சிருக்கு என்று பேசும் காட்சிகளில் கருணாஸ் எக்ஸ்பிரஷன் கலக்கல் ரகம்..
இப்படி ஒரு ஜட்ஜ் அம்மா தமிழ் சினிமாவுக்கு புதுசு என்று சொல்லும் அளவிற்கு ரம்யா கிருஷ்ணன் ரவுண்ட் கட்டி அடித்திருக்கிறார்.. புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல நீ யாருயா என்று வக்கீலை பார்த்து கேட்கும் போது.. அட ஆமா இல்ல என்று நமக்கே எண்ணம் வருகிறது.. ஜட்ஜ் சென்ற பிறகு விஷ்ணு ஐஸ்வர்யா போடும் அந்தக் கோர்ட் ரணகளம் இந்திய நீதித்துறைக்கே ரொம்ப புதுசு..
கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க ரம்யா கிருஷ்ணன் யோகி பாபு வந்த பிறகு படத்தின் காமெடி வேற லெவல் ரகம்.. ரொம்ப நாளாச்சு இப்படி ஒரு படம் பார்த்து ரசிச்சு சிரிச்சு என்று சொல்லிக்கொண்டு தான் நாம் தியேட்டர் விட்டு வெளியே வருவோம்..

யோகிபாபு, முனீஸ்காந்த், கருணாகரன் காளி வெங்கட் காமெடி நட்சத்திரங்கள் இந்த படத்திற்கு கூடுதல் பங்களிப்பை கொடுத்து இதை ஒரு காமெடி திருவிழா எனக் கொண்டாடும் அளவுக்கு செய்து விட்டனர்.. இவர்களுடன் கஜராஜ் – ஸ்ரீஜா ரவி ஆகியோரும் தங்கள் பங்குக்கு குஸ்தி-யை குஷியாக்கி உள்ளனர்..
டெக்னீசியன்ஸ்…
Music : Sean Roldan
DOP : KM Bhaskaran
Editor : Barath Vikraman
Art Director : Jayachandran
Costume designer : Ruchi Munoth
படம் முழுக்க கலர் வேஷ்டி கலர் சட்டையில் வருகிறார் விஷ்ணு.. இதற்கு தமிழ் ஹீரோவுக்கு ஒரு பாராட்டு கொடுக்க வேண்டும்.. பெரும்பாலும் எந்த ஹீரோவும் படம் முழுக்க இப்படி செய்வதில்லை.. ஐஸ்வர்யா & மோக்ஷா உடைகளையும் சிறப்பாக வடிவமைத்துள்ளார் காஸ்டியூம் டிசைனர் ருச்சி..
காமெடிக்கும் புதுவிதமான ட்ரெண்ட் மியூசிக் கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்.. சம்பவக்காரி பாட்டுக்கு ரிலீஸ் போடாதவர்களே இல்லை என்னும் அளவுக்கு ஏற்கனவே சோசியல் மீடியாவில் சம்பவம் செய்துவிட்டார் இவர்..

பரத் விக்ரமன் எடிட்டிங் செய்திருக்கிறார்.. என்னய்யா இவ்வளவு சீக்கிரத்தில் படத்தை முடிச்சிட்டீங்க என்ற சொல்லும் அளவுக்கு செய்து விட்டார்..
பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. ரெஸ்லிங் பயிற்சி மையம்.. விஷ்ணு வசிக்கும் அப்பார்ட்மெண்ட் ஷார படிக்கும் ஸ்கூல்.. கிளைமாக்ஸ் குஸ்தி திருவிழா.. என அனைத்தையும் தன்னுடைய கேமராவில் கலர்ஃபுல்லாக்கி இருக்கிறார்..
Marketing and Promotions : Siddarth Srinivas
PRO – Sathish (AIM)
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் – டாக்டர் ஐசரி கே.கணேஷ், விஷ்ணு விஷால் தயாரிப்பில் இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘கட்டா குஸ்தி 2’..
படத்தின் பிரம்மாண்டம் பொருட்செலவில் மட்டுமல்ல அதன் உருவாக்கத்திலும் உள்ளது என்பதை இந்த பட குழுவினர் நிரூபித்துள்ளனர்.. ஷாரா படிக்கும் ஸ்கூல்.. விஷ்ணு வசிக்கும் அப்பார்ட்மெண்ட்.. ஐஸ்வர்யா பயிற்சி பெறும் மையம்.. எனத் தேவைக்கு ஏற்ப மட்டுமே செலவு செய்து உள்ளனர் தயாரிப்பாளர்கள்..

இயக்குனர் செல்லா அய்யாவு.. ‘கட்டா குஸ்தி 2’ இந்த படத்துடன் சேர்த்து இவர் இதுவரை 3 படங்கள் மட்டுமே இயக்கி உள்ளார்.. ஹீரோ விஷ்ணு விஷால் தான்..
கிளைமாக்ஸ் காட்சியில் புருஷன் பொண்டாட்டி குஸ்தி போட்டி.. அதற்குக் கட்டணம் என படம் முழுக்க சிரிப்பு மழையில் நனைய வைத்து விட்டார் இயக்குனர் செல்லா அய்யாவு.. இனி இவர் தயாரிப்பாளர்களின் செல்ல இயக்குனராக மாறிவிடுவார்..
சிரிங்க சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க என படம் முழுக்க சிரிக்க வைத்தாலும் கணவன் மனைவி உறவுக்கு யாரும் நுழையக்கூடாது நுழைந்தால் என்ன பிரச்சனைகள் வரும் என்பதையும்.. விவகாரத்து விஷயத்தில் குழந்தைகள் விருப்பம் முக்கியமானது என்பதையும் சொல்லி மெசேஜ் கொடுத்திருக்கிறார் செல்லா அய்யாவு..
Gatta Kusthi 2 movie review
—-

