காட்டாளன் விமர்சனம்

காட்டாளன் விமர்சனம்

காட்டாளன் விமர்சனம்

 

 

ஸ்டோரி…

காட்டுக்குள் நடக்கும் பல கடத்தல் சம்பவங்களை கதையாக பார்த்திருக்கிறோம்.. அந்த வரிசையில் வந்திருக்கும் படம் இந்த காட்டாளன்.. காட்டை ஆள்பவன் என்றும் பொருள் கொள்ளலாம்..

சட்டவிரோதமாக யானைகளைக் கொன்று அதன் தந்தங்களை கடத்தி வெளிநாட்டுக்கு அனுப்பி கோடி கோடியாக சம்பாதிக்கிறார் வில்லன் சுனில்.. எனவே அரசியல்வாதிகளுக்கும் போலீஸ்காரர்களுக்கும் இவர் ஒரு பிரச்சினையாக இருக்கிறார்..

ஒரு கட்டத்தில் இவருடன் நாயகன் வந்து சேர்கிறார் ஆண்டனி வர்கீஸ்.. இவர்களது கூட்டணி மற்றவர்களுக்கு பெரிய பேரதிர்ச்சியாக இருக்கிறது..

ஒரு கட்டத்தில் தன் இன மக்கள் சிகிச்சைக்காக ₹ 20 லட்ச ரூபாய் தேவைப்படுக்கிறது. சுனில் உதவியை கேட்கிறார் நாயகன் ஆண்டனி வர்கீஸ்

ஆனால் வெறும் ஐம்பதாயிரம் மட்டுமே தருவதாக சொல்கிறார் சுனில்.. இதனால் இவரே யானை தந்தங்களை கடத்தி விற்க முயற்சிக்கிறார்.. இதனால் இருவருக்கும் மோதல் வெடிக்கிறது.. அதன் பிறகு நடந்தது என்ன.? காட்டை ஆள்பவன் யார்? என்பதை மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

நாயகன் ஆன்டனி வர்கீஸ்.. பேச்சை குறைத்து விட்டு ஆக்ஷனில் அதகளம் செய்து இருக்கிறார் ஆன்டனி.. மை தீட்டிய போன்ற இவரது கண்களும் காந்த பார்வையால் கவர்கிறது.. படம் முழுக்க சீரியஸ் மூடில் காணப்படுகிறார்..

புஷ்பா படத்தில் வில்லனாக மிரட்டி இருப்பார் சுனில்.. அதேபோல கேரக்டர் மீண்டும் கிடைக்க சும்மா விடுவாரா சுனில்..? பட்டையை கிளப்பி இருக்கிறார்..

இலங்கையில் நுழைந்த பிறகு திடீரென என்ட்ரி கொடுக்கிறார் நாயகி துஷாரா விஜயன்.. ஆக்ஷனில் அடித்து தூள் கிளப்பி இருக்கிறார்..

பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர் ஆகியோரின் நடிப்பும் படத்திற்கு பலம்..

டெக்னீசியன்ஸ்…

ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.. காட்டுத்தீயை போல இவரது பின்னணி இசை அனலாய் பறக்கிறது..

யானையை வேட்டையாடும் காட்சிகளில் ரெனாடைவ் ஒளிப்பதிவு மிரட்டல்..

பால் சார்ஜ் என்பவர் இயக்கியிருக்கிறார் ஒரு பக்க அதிரடி ஆக்சன் மசாலா படத்தை கலந்து கொடுத்து இருக்கிறார்..

பான் இந்தியா படங்கள் வந்துவிட்ட பிறகு தென்னிந்தியாவில் அதிகமான படங்கள் அதே பாணியில் உருவாகி வருகிறது.. மலையாள படங்களும் இணைந்து விட்டன.. அவர்களும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் மிரட்டலான படங்களை எடுக்கத் துவங்கிய விட்டனர்.. அந்த வரிசையில் இந்த காட்டாளனும் இணையும்…

யானையை வைத்து காட்சிகள் எடுப்பது சிரமம் என்றாலும் அதில் கிரீன் மேட்ரும் எதுவும் பயன்படுத்தாமல் யானை பாகனை மட்டும் மறைத்து யானைகளை மிரட்டலாக காட்டி இருக்கின்றனர்.. யானை தந்தங்களை வேட்டையாடும் போது யானைகள் மிரளுவதும் துரத்துவதும் என மெய் சிலிர்க்க வைக்கின்றனர்..

இடைவேளைக்கு பிறகு கதை வேகம் பிடிக்கிறது.. மலைவாழ் மக்களின் சென்டிமென்ட் காட்சிகளும் வழக்கம்போல உள்ளது..

எண்டு கார்டு போடும்போது திடீரென்று என்ட்ரி கொடுக்கிறார் ஸ்டைலிஷ் மிரட்டலான வில்லனாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.. காட்டாளன் படத்தில் இரண்டாம் பாகத்தில் லோகேஷ் தான் ஹீரோ.. கடத்தல் கதை என்றாலே லோகேஷ் ஒரு இயக்குனராக மிரட்டுவார்.. இதில் வில்லன்…. இன்னும் பட்டையை கிளப்புவார் என்று எதிர்பார்க்கலாம்..

 

Kaattalan movie review