ரோபோ சங்கர் நாயகனாக நடித்த *ஈகோ ராமன்* விமர்சனம்

ரோபோ சங்கர் நாயகனாக நடித்த *ஈகோ ராமன்* விமர்சனம்

ரோபோ சங்கர் நாயகனாக நடித்த *ஈகோ ராமன்* விமர்சனம்

 

ஸ்டோரி…

ரோபோ சங்கர் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.. மாணவர்களை உற்சாகப்படுத்துவதில் ஊக்கம் கொடுப்பதில் தனித்துவம் மிக்கவர்.. இவரது மாணவன் சிபிக்கு பக்க பலமாக இருக்கிறார்.. ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் இருந்து சிபியை காப்பாற்றுகிறார்..

என்னதான் சிறந்த ஆசிரியராக இருந்தாலும் ஒரு கட்டத்தில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்கும் போது இவருக்குள் இருக்கும் ஈகோ அதிகமாக தென்படுகிறது.. தன்னைப்போல் எவராவது சைக்கிள் வைத்திருந்தால் உடனே அந்த சைக்கிளை மாற்றி டிவிஎஸ் 50 க்கு மாறுகிறார்.. அதைப்போல் எவராது பைக் வைத்திருந்தால் அதை மாற்றி யமஹா ஆர்எக்ஸ் வண்டிக்கு மாறுகிறார்..

இப்படியான ஒரு கட்டத்தில் இவரது யமஹா வண்டி விபத்துக்குள்ளாகிறது. இந்த சூழ்நிலையில் வட்டிக்கு தவணை சரியாக கட்டாத காரணத்தினால் சிபியின் யமாஹா வண்டியை தூக்கி வந்து விடுகின்றனர் ஷோரூம் ஊழியர்கள்..

அப்போது இந்த வண்டி ரோபோ சங்கருக்கு கை மாறுகிறது.. வட்டி பணத்தை மீண்டும் கட்டும்போது அந்த வண்டி ஷங்கருக்கு கை மாறியதை அறிகிறார் சிபி.. இதனால் ஆசிரியருக்கும் மாணவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது.

அதன் பிறகு நடந்தது என்ன.? ஆசிரியரின் ஈகோ மோதலில் மாணவர் என்ன ஆனார்.? ஆசிரியருக்காக மாணவர் விட்டுக் கொடுத்தாரா என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

ரோபோ சங்கர், சிபி புவனச்சந்திரன், கீர்த்தனா, கவிதா ரமேஷ், சப்பானி முரளி, சேரன்ராஜ், லதா

காமெடி செய்த ரோபோ சங்கரை கண்கலங்க வைக்க நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.. ஒரு ஈகோ ஒரு மனிதனை எப்படி தனிமைப்படுத்தும் என்பதை சங்கர் தன் நடிப்பில் மூலம் வெளிப்படுத்தி சபாஷ் பெறுகிறார்.. கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு கண்ணில் மட்டும் கண்ணீர் வரும் நடிப்பை ரோபோ ஷங்கர் வெளிப்படுத்தி இருப்பது அவரது நடிப்புக்கு சான்று..

ஸ்மார்ட்டான லுக்கில் கிராமத்து எதார்த்த இளைஞனாக கவறுகிறார் சிபி.. தந்தை இல்லாத ஒருவன் தாய் வளர்க்கும் போது எப்படி பொறுப்பாக இருப்பார் என்பதை தன் நடிப்பில் காட்டியிருக்கிறார்…

நாயகியாக கீர்த்தனா.. வழக்கமான ஹீரோயின் போல அல்லாமல் கதையுடன் ஒன்றிய நடிப்பை கொடுத்திருக்கிறார்.. நீ எனக்காக இருப்பாய் என்ற நம்பிக்கை வரும்போது தான் உன்னை காதலிப்பேன் என்ற வசனத்தின் மூலம் பெண்களின் எதிர்பார்ப்பை சொல்லி இருக்கிறார்..

சப்பாணி முரளி, சேரன்ராஜ், லதா ஆகியோர் தங்களுடைய பங்களிப்பை சரியாக கொடுத்துள்ளனர்

டெக்னீசியன்ஸ்…

பாடல்கள் & இசை — ரெய்மன் ராட்ரிக்ஸ்.. பாடல்களும் பின்னணி இசையும் ஓகே ரகம்.. ஆனால் எல்லா பாடல்களுமே ஒரே மெட்டு போல இருப்பதை மாற்றி இருக்கலாம் அல்லது.. ஹீரோ ஹீரோயினுடன் கொஞ்சம் குரூப் டான்ஸ்சர் வைத்திருக்கலாம்..

மக்கள் தொடர்பு- வெங்கட்

கதை திரைக்கதை
வசனம் இயக்கம் –
கணேசன் நாச்சிமுத்து.

ஒரு காமெடியனாகவே ரோபோ ஷங்கரை தமிழ் சினிமா பார்த்து இருக்கிறது.. அவருக்குள் ஒரு குணசித்திர கேரக்டர் இருப்பதை அறிந்த இயக்குனர் கணேசனை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்..

சிபி சிறுவனாக இருக்கும்போது அதே பள்ளி அவர் ஆபிஸராக வரும் போதும் அப்படியே இருப்பதை இயக்குனர் கொஞ்சம் கவனித்து இருக்கலாம்.. கொஞ்சமாவது மாற்றிக் காட்டி இருக்கலாம்..

அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.. தயாரிப்பு- சுதா.ஜி

சமூகத்தை வழிநடத்தும் ஆசிரியர்களுக்கு ஈகோ இருக்கக் கூடாது என சோசியல் மெசேஜ் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கணேசன் நாச்சிமுத்து..

 

Robo Sankars Ego Raman movie review