வாரண்ட் வெப் சீரிஸ் விமர்சனம் 4/5.. காவலர்களுக்கு பாடம் எடுத்த குற்றவாளிகள்

வாரண்ட் வெப் சீரிஸ் விமர்சனம் 4/5.. காவலர்களுக்கு பாடம் எடுத்த குற்றவாளிகள்

வாரண்ட் வெப் சீரிஸ் விமர்சனம் 4/5.. காவலர்களுக்கு பாடம் எடுத்த குற்றவாளிகள்

ஸ்டோரி…

பாலாஜி சக்திவேல் – கௌசல்யா இருவரும் தம்பதிகள்.. இவர்களின் மகன் பிரசாந்த் பாண்டியராஜ்..

ரிட்டையர்டு ஆசிரியர் பாலாஜி தன் மகனையும் தன்னைப் போலவே அரசு ஊழியராக பார்க்க ஆசைப்படுகிறார்..

மகனை எல்லா தேர்வுகளையும் எழுத சொல்கிறார்.. ஆனால் ஒவ்வொரு தேர்விலும் தோல்வி அடையவே வேறு வழி இன்றி சிபாரிசின் பேரில் தன் உறவினர் காளி வெங்கட் மூலம் காவல்துறையில் பிரசாந்த்தை சேர்கிறார்..

சிபாரிசு மூலம் வேலை கிடைத்ததால் வேலையில் அலட்சியமாக இருக்கிறார் பிரஷாந்த்.. இதனால் பல கேலி கிண்டலுக்கு ஆளாகிறார்..

ஒரு நாள் இவரது கட்டுப்பாட்டில் இருக்கும் கைதி தப்பித்து சென்று விடுகிறார்.. இதனால் மேலும் மேலும் பிரச்சனைக்கு உள்ளாகிறார்..

மன உளைச்சலுக்கு ஆளாகும் பிரசாந்த் போலீஸ் வேலையை கைவிட நினைக்கிறார்.. அப்போது ஒரு சம்பவம் நடக்கிறது.. அதன்படி பல மாற்றங்கள் உருவாகிறது.. அதன் பிறகு நடப்பது என்ன என்பதே சுவாரசியமான திரைக்கதை..

கேரக்டர்ஸ்…

விலங்கு இணைய தொடர் மற்றும் மாமன் படங்களை இயக்கியவர் பிரசாந்த் பாண்டியராஜன்.. அவரே இதில் கதை நாயகன்.. முதல் இரண்டு எபிசோடுகளில் வெள்ளந்தியாக வரும் பிரஷாந்த் பின்னர் தன்னுடைய நடிப்பில் வெரைட்டி காட்டி மிரட்டி இருக்கிறார்.. இவரது குரலில் ஒரு மென்மை இருந்தாலும் அந்த வெள்ளந்தி (கோட்டை கருப்பசாமி) கேரக்டருக்கு பக்காவாக பொருந்தி போகிறது..

எல்லா போலீசும் கம்பீரம் காட்டும் கில்லாடிகள் அல்ல. எதார்த்த காவலர்களும் இருக்கிறார்கள் என்பதை தன் நடிப்பில் பரிமாணங்களாக காட்டியிருக்கிறார்..

நாயகிகளாக நர்மிதா.எம்.வி, அருள்ஜோதி, சாயா தேவி ஒவ்வொருவரும் நம் மனதில் நடிப்பாலும் நிறைந்திருக்கின்றனர்..

விலங்கு வெப் சீரியலில் வரும் ரேஷ்மா கேரக்டரும் இந்த வாரண்ட் சீரியலில் வரும் சாயாதேவி கேரக்டரும் ஒன்றுதான்.. ஆனால் விலங்கு-ல் கொஞ்சம் கவர்ச்சி இருந்தது.. ஆனால் இதில் சாயாதேவி-யின் மேல் மரியாதை வரும்.. சாயாதேவி கேரக்டர் மீது சாயாதவர்களே இருக்க முடியாது..

பிரசாந்த் தந்தையாக பாலாஜி சக்திவேல், அம்மாவாக கெளசல்யா, போலீஸ் இன்ஸ்பெக்டராக அருள்தாஸ், காவலராக ஹெலோ கந்தசாமி, கொடைக்கானல் சரவணன் (பாக்யா), போலீஸ் அக்கா, கிளைமாக்ஸ் காட்சியில் வரும் பிரசாந்த் தம்பி சிவா என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பெரிய பாராட்டுகளை கொடுக்கலாம்..

போலீஸ் ஏன் இவ்வளவு கேவலமாக இருக்காங்க என அருள்தாஸ் சொல்லும் கதையும்… சிவா சொல்லும் போலீஸ் கதையும் இனி காவலர்களுக்கு ஒரு லாக்கப் லெசன் சொல்லும்..

டெக்னீசியன்ஸ்…

இந்த வாரண்ட் சீரியலில் 8 எபிசோடுகள் .. கடைசி ஆறு எபிசோடுகள் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.. ஆனால் படத்தில் ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள் அதை MUTE போட்டு இருக்கலாம்..

அசோக் குமாரின் ஒளிப்பதிவு… காவல் நிலையம் மற்றும் திருச்சி மாநகர அழகை காட்டியிருக்கிறார்..

சாம்.சி.என் பின்னணி இசை மிரட்டல்.. இரண்டு பாடல்கள் இரண்டும் ரசிக்க வைக்கிறது.. எல்லாம் நீ தானே என்ற பாடலும் பாடல் வரிகளும் இனி காதலர்களுக்கு ஃபேவரைட்..

ஆர்.ராமரின் படத்தொகுப்பு.. விறுவிறுப்பு இருந்தாலும் கொஞ்சம் கத்தரி போட்டு இருக்கலாம்..

பிரசாந்த் பாண்டியராஜ் கதை வடிவம் கொடுத்திருக்கிறார்.. இவருடன் பணிபுரிந்த விக்னேஷ் நடராஜன் இந்த படத்தை இந்த இணைய தொடரை இயக்கியிருக்கிறார்..

கொடைக்கானல் சரவணன் தேடும் விசாரணை என்று சொல்லப்பட்டாலும் இடை இடையே பல விசாரணை வழக்குகளை வைத்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக காட்டி ரசிகர்களை சீட்டு நுனியில் உட்கார வைத்து இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் நடராஜன்

ஊரையே தன் கட்டுப்பாட்டில் காவல்துறை வைத்திருந்தாலும் காவல் நிலையத்தில் லாக்கப் மரணம் நிகழ்ந்து விட்டால் அவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்… இதில் காவலர்கள் எப்படி கயவர்களாக மாறுகிறார்கள் என்பதையும் தைரியமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ்…

இளம் வயது நீதிபதியாக நடித்துள்ள பஞ்சபி என்ற பெண் கேரக்டரும் தைரியமான நடிப்பை கொடுத்துள்ளார்

கிடைக்க வேண்டிய வயசுல எதுவும் கிடைக்கல.. என பாலாஜி சக்திவேல் சொல்லும்போது திருமணமாகாத 90ஸ் – 80ஸ் கிட்ஸ் மனநிலை புரிகிறது..

கொட்டை கொட்டை என கேலி செய்தவர்கள் கோட்டை கருப்பசாமி என சொல்லும் போது நீங்கள் ஓடிடியில் பார்த்தாலும் விசில் அடிப்பீர்கள்..

ஆக இந்த வாரண்ட் இணைய தொடர் ரசிக்க வேண்டிய ஒன்று..

 

Warrant web series review