முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டும் அதை செயல்படுத்த முடியாத ‘கருப்பு’ படக்குழு

முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டும் அதை செயல்படுத்த முடியாத ‘கருப்பு’ படக்குழு

 

முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டும் அதை செயல்படுத்த முடியாத ‘கருப்பு’ படக்குழு

 

RJB இயக்கத்தில் சூரியா, த்ரிஷா, நட்டி, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘கருப்பு’.

சாய் இசையமைத்துள்ள இந்த படத்தை ட்ரீம் வாரீயர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது..

இந்த படம் இன்று மே 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது.. இந்த படத்திற்காக சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்திருந்தார் முதலமைச்சர் விஜய்..

எனவே தமிழக முதல்வருக்கு காலை 9 மணி காட்சிக்கு சிறப்பு அனுமதி அளித்ததுக்காக கருப்பு படக்குழுவினர் நன்றி தெரிவித்து போஸ்டர் வெளியிட்டிருந்தனர்..

‘கருப்பு’ பட ரிலீஸில் பைனான்ஸ் பிரச்சினை காரணம் என ஒரு பக்கம் கூறப்படுகிறது.. இதனை முன்னிட்டு இயக்குனர் ஆர் ஜே பாலாஜி படம் நாளை திரையரங்கில் வெளியாகும் ரசிகர்கள் பார்த்து மகிழ்ச்சி அடையவும் என பதிவிட்டு இருந்தார்..

இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு காட்சி ரத்து செய்யப்படுவதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தன்னுடைய X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.. இதன் மூலம் சிறப்புக் காட்சி தவிர மற்ற காட்சிகள் திரையிடப்படும் எனத் தெரிகிறது…

 

Suriyas Karuppu movie special 9am shows cancelled