கர விமர்சனம்… 4/5.. வஞ்சித்த வங்கியை வேட்டையாடும் வசூல் நாயகன் தனுஷ்
கர விமர்சனம்… 4/5.. வஞ்சித்த வங்கியை வேட்டையாடும் வசூல் நாயகன் தனுஷ்
ஸ்டோரி…
1990 ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.. எங்கோ நடக்கும் உலகப் போரினால் ஒரு தமிழக விவசாயி பாதிக்கப்படுவான் என்பதை வலியுடன் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்..
விவசாயிகளை வஞ்சிக்கும் வங்கிகள்… வங்கிகளை கொள்ளையடித்து கடனை அடைக்க முற்படும் நாயகன் கர சாமி தனுஷ்.. திருந்தி வாழ நினைத்தாலும் தன்னை நம்பி இருக்கும் மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது செய்ய வஞ்சித்த வங்கியில் வசூல் செய்த வசூல் நாயகன்..

கேரக்டர்ஸ்…
தனுஷ், மமிதா பைஜூ, சுராஜ் வெஞ்சரமோடு, கே எஸ் ரவிக்குமார், ஜெயராம், எம் எஸ் பாஸ்கர், ஸ்ரீஜா ரவி, கருணாஸ், ப்ருதிவி பாண்டியராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்..
தனுஷ் ரசிகர்களுக்காக தனிப்பட்ட காட்சிகளை வைக்காமல் ஒரு கதையின் நாயகனாகவே தனுஷை காட்டியிருக்கிறார் இயக்குனர்.. பேங்க் கொள்ளையடிக்க திட்டம் போடுவது முதல் தந்தையிடம் நிலத்தை விற்க சொல்லி பேசுவதாகட்டும்.. மருத்துவமனையில் தவிக்கும் காட்சி.. காவல்நிலையத்தில் கதறும் காட்சி என படம் முழுக்க கரசாமியாக கைத்தட்டல்களை அள்ளுகிறார் தனுஷ்..
பல படங்களில் இளமை துள்ளலாக பார்த்த மமிதாவை கிராமத்து பெண்ணாக காட்டியிருக்கிறார்.. அவரும் நெருக்கமான காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்..
விளம்பர பிரியராக போலீஸ் கேரக்டரில் மிரட்டி இருக்கிறார் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு.. மலையாளம் கலந்த தமிழ் குரலில் அசத்தல் நடிப்பு..
எதிர்பார்க்காத கேரக்டரில் கிட்டத்தட்ட வில்லனாகவே ஜெயராம் பிண்ணியிருக்கிறார்..

வயதான விவசாயியாக எம்எஸ் பாஸ்கர் தனுஷின் நண்பராக பிரித்வி அனைவரும் நடிப்பில் கவர்கின்றனர்..
பண்பட்ட நடிப்பில் கருணாஸ் கொஞ்சம் காமெடிக்கு உதவியிருக்கிறார்..
கே எஸ் ரவிக்குமாரை சிறந்து இயக்குனராக பார்த்திருக்கிறோம்… இதில் சிறந்த நடிகராக காணலாம்.. அவர் இறந்த பின்னும் அவரைச் சுற்றியே கதைக்களம் அமைக்கப்பட்டிருப்பது அவருக்கான ஸ்பெஷல்..
தனுஷ் அம்மாவாக ஸ்ரீஜா ரவி.. இவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்பதால் குரலில் கூட நடிப்பை ஒலிக்கச் செய்திருக்கிறார்.. அன்றாடம் பார்க்கும் அம்மாக்களை நினைவுப்படுத்துகிறார்..

டெக்னீசியன்ஸ்…
ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.. தனுஷ் படங்கள் என்றால் தனி கவனம் எடுத்துக் கொள்கிறாரோ..? கண்ணம்மா கண்ணம்மா பாடல் கண்களை விட்டும் மனதை விட்டும் அகலாது.. கே. எஸ் ரவிக்குமார் – தனுஷ்.. (தந்தை மகன்) சென்டிமென்ட் காட்சிகளில் இசை மூலம் இதயங்களை வருடி செல்கிறார்..
படத்தின் நீளத்தை எடிட்டர் குறைத்து இருக்கலாம் முதல் பாதி கொஞ்சம் நீளம்..
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. சில வருடங்களுக்கு முன்பு நாம் வாழ்ந்த வாழ்க்கையை மலரும் நினைவுகளாக தந்திருக்கிறார்.. காட்சிகளில் அப்படி ஒரு நேர்த்தி..
போர் தொழில் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த விக்னேஷ் ராஜா இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. தனது அடுத்த படக் கதைக்கு சில வருடங்கள் எடுத்துக் கொண்டாலும் தரமான கர சாமியை கொடுத்திருக்கிறார்..
விவசாயிகள் பிரச்னை, பேங்க் கடன், ஜப்தி, திருடனை விரட்டும் போலீஸ் என கமர்சியல் படங்களுக்கு உரிய அனைத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார்..

மக்களின் பணம் வங்கியில் தான் பாதுகாப்பு என்றாலும் அந்த வங்கியில் நடக்கும் அவலங்களை மக்களுக்கு எடுத்து சொல்லி இருக்கிறார்.. வங்கிகளால் மக்களின் பணம் மறைமுகமாக சூறையாடப்படுவதையும் அதனை தட்டிக் கேட்க ஒருவன் வந்தால் என்ன நிலைமை என்பதையும் திரைக்கதை வடிவமாக கொடுத்திருக்கிறார்..
Dhanush Kara movie review

