பிரேக் ஃபாஸ்ட் விமர்சனம்… இட்லிக்கு கெட்டியான சட்னி… இல்லறத்திற்கு கெட்டியான மனம்
பிரேக் ஃபாஸ்ட் விமர்சனம்… இட்லிக்கு கெட்டியான சட்னி… இல்லறத்திற்கு கெட்டியான மனம்
ஸ்டோரி…
கிர்த்திக் மோகன் & அமிதா.. – காதலித்து திருமணம் செய்தாலும் ஈகோ பிரச்சனையால் டைவர்ஸ் செய்ய முடிவு எடுத்து வக்கீல் கஸ்தூரியிடம் செல்கின்றனர்..
ஆனாலும் இவர்களுக்கு ஒரு கதையை சொல்லி வேறொரு தம்பதியின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியத்தை சொல்கிறார் கஸ்தூரி…
அந்தக் காதல் கதையில் பணக்கார நாயகி ரோஸ்மின் ஏழையான ராணவ் என்பவரை காதலிக்கிறார்.. அவர்கள் வாழ்வில் நடந்த பிரச்சனை என்ன.?
இந்த தம்பதிகளிடம் அவர்களின் பிரச்சனையை கஸ்தூரி சொல்ல என்ன காரணம்.? அவர்களுக்கும் இவர்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
ராணவ், ரோஸ்மின், கஸ்துாரி, சம்பத், அர்ச்சனா, கிர்த்திக்மோகன், அமிதா
ராணவ் – ரோஸ்மின்..
கிர்த்திக்மோகன் – அமிதா..
இரண்டு காதல் ஜோடிகள்.. அவர்கள் வாழ்வில் நடந்த சின்ன மோதல்கள்.. செல்ல சண்டைகள்.. ரொமான்ஸ்.. ஈகோ பிரச்சனை என ஒவ்வொரு தம்பதிக்கும் உள்ள தாம்பத்திய உறவை அழகாக தங்கள் நடிப்பில் ஜோடிகள் உணர்த்தியுள்ளனர்..
ராணவ் அம்மாவாக அர்ச்சனா, அப்பாவாக ரங்கநாதன்.. ஹீரோயின் அப்பாவாக சம்பத் ஆகியோரும் உண்டு.. ஆலோசனை சொல்ல இவர்களின் பங்களிப்பு முக்கியம்..
நடிகை கஸ்தூரி.. வக்கீல் கேரக்டருக்கும் அவரின் பேச்சுத் திறமைக்கும் பக்கா பொருத்தம்..

டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவு: எம்.வி.பன்னீர்செல்வம்
இசை: ஜி.வி.பிரகாஷ்
ஜி வி பிரகாஷ் இசையும் பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு இட்லிக்கு சட்னி போல பக்கா பொருத்தம்.. காட்சிகளுக்கு ஏற்ப பின்னணி இசை செம..
தயாரிப்பு: கிரிஜா வரதராஜ்
இயக்கம்: ஏ.ஆர்.காந்திகிருஷ்ணா
செல்லமே, ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கியவர் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரேக்ஃ பாஸ்ட் படத்தை இயக்கியுள்ளார்..
இரண்டு ஜோடிகளின் கதையை ரொமான்டிக்காக வடிவமாக தந்திருக்கிறார்..
காதலர்களுக்குள் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகள் அதன் பிறகு திருமண எப்படி விரிசல் அடைகிறது என்பதை எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார்.
மனம் விட்டு பேசினால் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்.. ஆனால் ஈகோ பிரச்சினையால் பல இளம் ஜோடிகள் விவகாரத்தை நாடுகின்றனர்.. அவர்களுக்கு முன்னோர்கள் அட்வைஸ் செய்தாலும் பிடிக்காது என்பதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்..
ஈகோ மோதலை களைந்து அட்ஜஸ்ட் செய்து வாழ்ந்தால் வாழ்க்கை அழகாகும் என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா..
Break fast movie review

