BATTLE பேட்டில் விமர்சனம்

BATTLE பேட்டில் விமர்சனம்

 

BATTLE பேட்டில் விமர்சனம்

 

ஸ்டோரி…

நாயகன் அர்ஜுன் பிரபாகரன் – ராப் பாடகர்..

நாயகி ஆராத்யா – தனியார் பள்ளி ஆசிரியை.. இருவரும் காதலிக்கின்றனர்..

பள்ளியில் மாணவிகளுக்கு நடக்கும் பல பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுகிறார் ஆசிரியை ஆராத்யா.. எனவே அவருக்கு உதவுகிறார் நாயகன் அர்ஜுன்..

இதனால் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்.. இறுதியில் என்ன ஆனது.? தனியார் பள்ளியில் என்ன பிரச்சனை.? மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமை என்ன.? நாயகன் என்ன செய்தார்.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

அர்ஜுன் பிரபாகரன், ஆராதயா, முனீஸ்காந்த், சுப்ரமணிய சிவா மற்றும் பலர்

ராப் பாடகராக நாயகன் அர்ஜுன் பிரபாகரன.. ஆக்ஷன் ரொமான்ஸ் என இரண்டிலும் பாஸ் மார்க் பெறுகிறார்..

நாயகி ஆராத்யா.. ஒரு நேர்மையான ஆசிரியராக அசத்தியிருக்கிறார்.. நாளைய சமூகத்தை உருவாக்கும் ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை தன் நடிப்பில் உணர வைத்திருக்கிறார்..

அரசியல்வாதியின் உடல் மொழியில் முனிஷ்காந்த் கலக்கி இருக்கிறார்..

தனியார் பள்ளி தாளாளராக இயக்குனர் சுப்ரமணியம்சிவா.. மிரட்டல் நடிப்பு..

டெக்னீசியன்ஸ்…

தயாரிப்பு: எலைட் டாக்கீஸ்

இசை: ஜீவா

ஒளிப்பதிவு : யுவராஜ்

இயக்கம்: நாராயணன்

பிஆர்ஓ : நிகில் முருகன்

ஜீவா என்பவர் இசை அமைத்திருக்கிறார்.. மாடர்ன் குழந்தைகளின் பேவரைட் ஆன ராப் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஸ்கோர் செய்கிறார்..

யுவராஜ் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது.. அரசு பள்ளிகளை காட்டிலும் தனியார் பள்ளியில் தரம் இருந்தாலும் அதில் நடக்கும் அவலங்களை கேமரா மூலம் பதிவு செய்திருக்கிறார்..

நாராயணன் இயக்கி இருக்கிறார்.. மாணவர்கள் ஆசிரியர்கள் அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை பேட்டில் படத்தில் ஒரு மனப்போராட்டமாக காட்டி இருக்கிறார்..

 

Battle movie review