சுதந்திர போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு காலமானார் 

சுதந்திர போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு காலமானார் 

சுதந்திர போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு காலமானார்

 

சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101) மரணம்.

இவர் சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கடந்த ஆண்டு மே மாதம் 9-ந் தேதி திடீரென நல்லகண்ணு தனது வீட்டில் தவறி விழுந்தார். இதில் காயம் அடைந்த அவரை குடும்பத்தினர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சைக்கு பின்னர் அவர் மாலையில் வீடு திரும்பினார்.

பின்னர், மீண்டும் சில மாதங்களுக்கு பின்னர் நல்லகண்ணுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

மேலும், மூச்சுத்திணறல், நுரையீரல் தொற்று உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டதால் நல்லகண்ணு வுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது..

 

மேலும் தமிழ்நாடு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலை வர்கள் நேரில் சென்று நல்லகண்ணு உடல்நலம் குறித்து விசாரித்தனர். அவ்வப்போது  வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.

 

அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நல்லக்கண்ணுவின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை இன்று மதியம் 2 மணியளவில்  அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது…

 

Veteran Politician CPI R Nallakannu passed away aged 101

 

 

 

Related articles