தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்… தலைவர் தம்பியின் தரமான சம்பவம்

தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்… தலைவர் தம்பியின் தரமான சம்பவம்

தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்… தலைவர் தம்பியின் தரமான சம்பவம்

 

ஸ்டோரி…

இளவரசு & தம்பி ராமையா இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள்.. இவர்களுக்கு பல வருடங்களாக தீரா பகை..

இளவரசு மகள் பிரார்த்தனாவின் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.. விருந்தினர்களுக்கு விருந்து.. மார்த்தாண்டத்தில் இருந்து மாப்பிள்ளை குடும்பம் வந்து கொண்டிருக்கிறது.. நாளை காலை 10:30 மணி முகூர்த்தம்..

இந்த இரவு சூழ்நிலையில் தம்பி ராமையாவின் தந்தை மரணம் அடைகிறார்.. எனவே முகூர்த்தம் வைக்கும் அதே நேரத்தில் தன் தந்தையின் உடல் எடுக்கும் இறுதி சடங்கு நடக்க வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறார் தம்பி ராமையா.

நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் முன் நின்று தலைமை ஏற்று நடத்தி வைக்கும் ஊர் பஞ்சாயத்து தலைவர் ஜீவா..

இந்த பிரச்சினையை எப்படி சமாளித்தார்? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்..

JIIVA as Jeevarathinam.
THAMBI RAMAIAH as Mani.
ILAVARASU as Ilavarasu.
PRATHANA NATHAN as Sowmiya.
JENSEN DHIVAKAR as Thavidu.
JAIWANTH as Thiyagu.

கலகலப்பான படங்களுக்கு நான் கேரண்டி என்று சொல்லாமல் சொல்பவர் ஜீவா.. இதில் சிக்ஸர் அடித்திருக்கிறார்.. கொஞ்சம் கலகலப்பு.. நிறைய சீரியஸ் என நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்..

எதிர்க்கட்சி நபராக வரும் ஜென்சன் திவாகர் காமெடி கலந்த வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்.. ஏற்கனவே லப்பர் பந்து, ஆண்பாவம் பொல்லாதது படங்களில் காமெடியில் கலக்கியிருந்தவர் இவர்..

நாயகி பிரார்த்தனா.. தன் பக்கத்து வீட்டு தோழி மரணத்தை சொல்லும் விதத்தில் உறக்கத்தில் கவர்கிறார்.. அதேபோல.. ஒரு தலை காதலனை விரட்டிச் செல்லும் காட்சியில் சிரிப்பை வரவழைக்கிறார்..

மார்த்தாண்டம் மாப்பிள்ளையும் அவரது குடும்பமும் கலகலப்புக்கு கேரண்டி.. கன்னியப்பன் மற்றும் அவரது கூட்டாளியின் கேரக்டர் படத்திற்கு கூடுதல் பலம்.. அவர்கள் பேசும் தமிழ் கலந்த மலையாளம் அம்புட்டு அழகு..

தம்பி ராமையாவின் தம்பிகளாக வருபவர்கள் வில்லத்தனம் நடிப்பில் மிரட்டல்..

இளவரசு மற்றும் தம்பிராமையான் கேரக்டர் படத்திற்கு பலம்.. இருவரும் பிடிவாதக்காரர்கள்.. நடிப்பிலும் பிடிவாதமாக ஸ்கோர் செய்து இருக்கின்றனர்..

கிளைமாக்ஸ் காட்சியில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததும் அதை… எவன்டா தண்ணி தொட்டியை தட்டி விட்டது என்று கேட்கும் சஷ்டியின் கேரக்டர் ரசிக்க வைக்கிறது..

 

டெக்னீசியன்ஸ்..

Production House: K R Group.
Producer: Kannan Ravi.
Director : Nithish Sahadev.
Writers : Sanjo Joseph, Nithish Sahadev & Anuraj OB.
Director of Photography: Bablu Aju.
Music & Original Score: Vishnu Vijay.
Editor: Arjune Babu.
Art Director: Sunil Kumaran.

Promotions: DEC
PRO : Sathish, S2 Media

விஷ்ணு விஜய் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு ஆணிவேர்..

பப்லு அஜு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. ஒரு நாள் மாலையில் தொடங்கி காலையில் முடியும் படம்.. இரவில் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு கிராமத்து அலங்கார விளக்குகளில் மெருகேற்றி இருப்பதும் சிறப்பு..

பாசில் ஜோசப் நடிப்பில் Falimy மலையாளத்தில் படம் இயக்கிய
நித்திஷ் சகாதேவ் TTT இயக்கியிருக்கிறார், இதில் தமிழுக்கு ஏற்றபடி வட்டார வசனங்களை இணைத்து காமெடி கலந்து சுவாரசியம் கொடுத்திருக்கிறார்..

ஒரு வீட்டில் திருமணம்… மறு வீட்டில் மரணம்.. இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கும் சம்பவம்.. அதற்கு எளிய மனிதர்களுடன் எளிய திரைக்கதையை கொடுத்து எல்லையில்லா இன்பத்தை கொடுத்து இருக்கிறார்..

நம் நாட்டு மக்களை திருத்த முடியாது என்ற சோசியல் மெசேஜ் கொடுத்து அதற்கு ஒரு அழகான தீர்வையும் சொல்லி கண்டிஷனை பாலோ பண்ணுங்க என அதிரடியாக வசனத்தில் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் நித்திஷ் சகாதேவ் மற்றும் ஜீவா படக் குழுவினர்..

 

Thalaivar Thambi Thalaimaiyil movie review