மக்கள் மனங்களை வென்ற ‘மகா நடிகை’ யார்.? மகுடம் சூட்டும் ஜீ தமிழ் டிவி
மக்கள் மனங்களை வென்ற ‘மகா நடிகை’ யார்.? மகுடம் சூட்டும் ஜீ தமிழ் டிவி
பிரம்மாண்டமாக அரங்கேறும் மகா நடிகை கிராண்ட் பினாலே.. வெற்றி மகுடத்தை வெல்ல போவது யார்?
தமிழ் சின்னத்திரையின் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் வாரந்தோறும் ஞாயிறு இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி மகாநடிகை. புதுமுக நடிகைக்கான தேடலாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கியது. ஆர்.ஜே விஜய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தேசிய விருது பெற்ற நடிகை சரிதா, நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட விஜய் ஆண்டனி மற்றும் நடிகை அபிராமி & ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
10 போட்டியாளர்கள் 10 பயிற்சியாளர்களுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த நிலையில் தற்போது 5 போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்..
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான கிராண்ட் பினாலே வரும் பிப்ரவரி 2-ம் தேதி பிரம்மாண்டமாக ஒளிபரப்பாக உள்ளது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பல விருதுகளை வென்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பாட்டில் ராஜா படக்குழுவினர் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் 5 போட்டியாளர்கள் தங்களது உச்சகட்ட நடிப்பு திறமைகளை வெளிப்படுத்த உள்ள நிலையில் மக்களின் மனங்களையும் நடுவர்களின் மனங்களை வென்று மகாநடிகைக்கான வெற்றி மகுடத்தை சூடப்போவது யார் என்பதை அறிந்து கொள்ள ஞாயிறு இரவு 8:30 மணிக்கு மகா நடிகை கிராண்ட் பினாலேவை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்…
Zee Tamil tv conducts Maha Nadigai reality show

