ஏலேலோ ஆல்பம் & ட்ரீம்ஸ் குறும்படம்.. விஜய் – விஷாலின் தம்பிகள் நேரில் வாழ்த்து

ஏலேலோ ஆல்பம் & ட்ரீம்ஸ் குறும்படம்.. விஜய் – விஷாலின் தம்பிகள் நேரில் வாழ்த்து

 

ஏலேலோ ஆல்பம் & ட்ரீம்ஸ் குறும்படம்.. விஜய் – விஷாலின் தம்பிகள் நேரில் வாழ்த்து

 

நேற்று ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏலேலோ ஆல்பம் & ட்ரீம்ஸ் குறும்படம் அறிமுக விழா பிரம்மாண்டமாக சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்கள் நடிகர்கள் சௌந்தரராஜா மற்றும் ஸ்ரீநாத் பங்கேற்று வாழ்த்தினர்.. மேலும் நடிகர் விஷாலின் ரசிகர் மன்றத்தினரும் பங்கேற்று வாழ்த்தினர்.. விஷாலின் ரசிகர் மன்ற தலைவர் ஹரியும் பங்கேற்று வாழ்த்தினார்.

இதில் நடிகர் விஜய்யின் 20 ஆண்டுகால போட்டோகிராஃபர் ஸ்டில்ஸ் சரவணன் மற்றும் விஷால் கார்த்திக் இருவரும் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்..

மணிகண்டன் இயக்கத்தில் உருவான ஏலேலோ என்ற ஆல்பத்தில் நாயகனாக நடன இயக்குனர் வெற்றிமாறன் நாயகியாக மோனா இருவரும் நடித்துள்ளனர்.. தமிழ் சினிமாவில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மோனா இதில் நாயகியாக நடித்திருக்கிறார்.

www.rightnewsraja.com

ஒரு இசை ஆல்பத்திற்காக கிட்டத்தட்ட 10 லட்ச ரூபாய் செலவிட்டுள்ளனர்.. இது லாப நோக்கத்துடன் படமாக்கப்படவில்லை ஆனாலும் எங்களின் திறமையை நிரூபிக்க இது எங்களுக்கு ஒரு விசிட்டிங் கார்டு போல செயல்படும் என பாடல் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

சிறப்பு விருந்தினர்களாக நடிகை கோமால் ஷர்மா, நடிகர்கள் அப்புகுட்டி சித்தா புகழ் தர்ஷன் மற்றும் இயக்குனர் ரமணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் கலந்து கொண்டு அனைவரையும் வாழ்த்தினார்.. மேலும் பல நடன கலைஞர்கள் பங்கேற்று ரஜினியின் வேட்டையன் பட பாடலுக்கும் அஜித்தின் விடாமுயற்சி பட பாடலுக்கும் பங்கேற்று நடனமாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்..

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போலத்தான் இந்த ஏலேலோ பாடல் மிக அற்புதமாக ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது.

ஏதோ ஒரு காரணத்திற்காக காதலர்கள் பிரிந்தாலும் காதல் என்றும் மாறாது.. அது உண்மையான காதல் என்றால் அதுவே அவர்களை மீண்டும் இணைத்து வைக்கும் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக ஏலேலோ பாடல் அமைந்திருக்கிறது

இந்த ஏலேலோ ஆல்பத்தின் நாயகன் நடன இயக்குனர் என்றாலும் நடன அசைவுகள் பெரும்பாலும் இல்லாமல் காதலின் வலியை உணர்த்தும் விதமாக பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

ஏலேலோ ஆல்பம் பாடலின் நாயகன் வெற்றிவேல் முருகன்.. நாயகி மோனா தயாரிப்பு வி எம் ஐஸ்டேஜ் பிலிம்ஸ்..

இயக்குனர் : மணிகண்டன்
இசை – ஜெய் கிரிஷ் கதிர்
ஒளிப்பதிவு – முருகானந்தம்  எடிட்டர் – கிஷோர்.
பிஆர்ஓ – சரவணன்  & கார்த்திக்

இந்த இசை ஆல்பத்தை தொடர்ந்து ட்ரீம்ஸ் என்ற குறும்படத்தை திரையிட்டனர்.. இந்த குறும்படம் சமுதாயத்திற்கு தேவையான கருத்தை சொல்லி விதமாக அமைந்துள்ளது.

பெரும்பாலும் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை தாண்டி அதை அழிக்க நினைக்காமல் அதுவே வளர்ந்து ஒரு சாதனையாளராக உருவாக்கி அதுவே ஒரு மருத்துவராகி ஒரு ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் போது வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

 

ஒரு கரு உருவானால் அதற்குக்கும் ஒரு கனவு இருக்கும்.. நாளை நான் பிறந்தால் வளர்ந்து உங்களை காப்பாற்றுவேன்.. என்னை கருவோடு கலைத்து விடாதே என்ற கருத்தை உணர்வு பூர்வமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்..

திரைத்துறையில் நிறைய மணிகண்டன் இருப்பதால் பலருக்கு அது குழப்பத்தை ஏற்படுத்தும்.. எனவே இந்த குறும்படம் மற்றும் இசை ஆல்பம் ஹிட்டாகும் போது அவர் ‘ஏலேலோ மணிகண்டன்’ என்று அழைக்கப்படுவார் என படக்குழுவினர் வாழ்த்தினர்..

மேலும் மணிகண்டன் போல திறமை மிக்க கலைஞர்கள் உருவாக வேண்டும்.. அவரிடம் நிறைய பெரிய நட்சத்திரங்கள் கதை கேட்டு வருகிறார்கள்.. எனவே விரைவில் அவரும் பெரிய இயக்குனர் வரிசையில் இடம் பெறுவார் என சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று வாழ்த்தினர்..

www.rightnewsraja.com

ட்ரீம்ஸ் – விவரம்

நடிகர்கள்
வினிதா
தேஜா உதயசங்கர்
ஹரிணி
கல்பனா
மீரா

தயாரிப்பாளர்
அருள்மொழி பிச்சர்ஸ்

இயக்குனர்
மணிகண்டன்

இசை
ஜெய்கிஸ் கதிர்

ஒளிப்பதிவு
குமரேசன்

எடிட்டர்
சேவியஎடிட்டர்

கிராபிக்ஸ் டிசைனர்
நவீன் செல்வா

 

Yelolo Song and Dreams short film launch