TRAIN Highlights அடுத்த எம்.ஆர்.ராதா விஜய்சேதுபதி.. – பார்த்திபன்..; சேட்டு வீட்டு கல்யாணம் போல இருக்கும்.. – விஜய் சேதுபதி

TRAIN Highlights அடுத்த எம்.ஆர்.ராதா விஜய்சேதுபதி.. – பார்த்திபன்..; சேட்டு வீட்டு கல்யாணம் போல இருக்கும்.. – விஜய் சேதுபதி

TRAIN Highlights அடுத்த எம்.ஆர்.ராதா விஜய்சேதுபதி.. – பார்த்திபன்..; சேட்டு வீட்டு கல்யாணம் போல இருக்கும்.. – விஜய் சேதுபதி

 

 

மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள படம் டிரெயின்..

உதயநிதி நடித்த ‘சைக்கோ’ படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி திரைக்கு விரைவில் வர உள்ள படம் ட்ரெயின் என்பது குறிப்பிடத்தக்கது..

மிஷ்கின் இயக்கத்தில் உருவான ‘பிசாசு 2’ இன்னும் வெளியாகவில்லை..

த்ரில்லர் பாணியில் ரயிலில் நடப்பது போல் எடுக்கப்பட்டுள்ளது.. இதில், நடிகர்கள் நாசர், ஷ்ருதி ஹாசன், யூகி சேது, நரேன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன் போன்றோர் நடித்துள்ளனர்..

கலைப்புலி எஸ் தானு தயாரித்துள்ள இந்த படத்திற்கு மிஷ்கின் இசையமைத்துள்ளார் என்பது கூடுதல் தகவல்..

இந்த படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஜூலை 12ஆம் தேதி இந்தப் படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னை சத்தியம் தியேட்டரில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது..

இதில் திரை உலக சேர்ந்த முக்கிய பிரபாகர்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்..

இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை விஜய் டிவியை சேர்ந்த டிடி மற்றும் மாகாபா ஆனந்த் இருவரும் தொகுத்து வழங்கினர்..

ஸ்ருதிஹாசன் மற்றும் மிஷ்கின் ஆகியோர் படத்தில் இடம்பெற்ற பாடல்களை மேடையில் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.. அதிலும் முக்கியமாக திருநங்கை தாலாட்டு என்ற பாடலை மிஷ்கின் பாடிய போதும் பாடி முடித்த பிறகும் ரசிகர்கள் மௌனமாக எமோஷனல் ஆனது குறிப்பிடத்தக்கது..

www.rightnewsraja.com

படக்குழுவினரை வாழ்த்தி பார்த்திபன் பேசும்போது…

ஒரு தமிழ் படத்திற்கு ஆங்கிலத்தில் டிரெய்ன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தேன்… ஆனால் இந்த படத்தின் டிரைலரை தற்போது திரையில் பார்த்த பிறகு தான் படமும் ஆங்கில படத்திற்கு நிகராக உள்ளது.. ஹாலிவுட் படத்திற்கு இணையாக உள்ளது..

என் சட்டையை பார்த்து ஒருவர் கேட்டார்.. என்ன சார் சட்டையை மாற்றி போட்டுட்டீங்களா உள்ளே பக்கம் வெளியே இருக்க.. வெளி பக்கம் உள்ள இருக்கு.. நான் காரணமாக தான் இந்த சட்டை போட்டு வந்தேன்.. ஏனென்றால் எனது அடுத்த படம் உள்ளே வெளியே பார்ட் 2..

இதை இந்த மேடையில் நான் சொல்ல காரணம் சில பேர் உள்ளே ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே ஒன்று பேசுவார்கள்.. ஆனால் உள்ளே என்ன நினைக்கிறாரோ அதையே வெளியே வெளிப்படையாக பேசும் தைரியம் கொண்டவர் மிஷ்கின்.. எதை செய்தாலும் தைரியமாக உண்மையாக செய்வார் அவருக்கு தூக்கம் வந்தால் ஆடியோ லான்ச் மேடையில் கூட தூங்குவார்..

ஒரு இயக்குனர் நடிகர் என்பதையெல்லாம் மீறி ஒரு மனிதனாக அவரை நான் ரசிப்பேன். இவரை போல ஒருவர் இருந்தார்.. தைரியமாக உண்மையை பேசும் அவர் நடிகவேள் எம் ஆர் ராதா. அவருக்கு இவருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.. ஆனால் அவரைப் போல இவர் துப்பாக்கியை எடுத்து சுட்டு விடக்கூடாது..

விஜய் சேதுபதியின் எல்லா படங்ககளையும் பார்ப்பேன்.. அவர் நடித்த விளம்பரங்கள் கூட பார்ப்பேன்.. சமீபத்தில் அவரது பேட்டி ஒன்று பார்த்தேன்.. அதில் அவரிடம் ஒரு கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்லும் போது… நான் தோல்வியை சந்தோஷமாக பார்ப்பேன்.. அது என்னை மீண்டும் உற்சாகப்படுத்தும்.. ஆனால் வெற்றியை பயமாக பார்ப்பேன்… இந்த ட்ரெயின் திரைப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும்…. அதை பார்த்து அவர் பயப்பட வேண்டும்.. ” என்று படக்குழுவினரை வாழ்த்தி பேசினார் பார்த்திபன்..

www.rightnewsraja.com

இறுதியாக விஜய் சேதுபதி பேசும்போது..

படம் முழுக்க ஸ்டூடியோ ட்ரெயினில் செட்டு போட்டு எடுக்கப்பட்டது.. சேட்டு வீட்டு கல்யாணம் போல கலகலப்பாக இருக்கும் எப்போதும் திருவிழா போல கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.. தினகரன் ஒரு செயலை செய்வார் மிஷ்கின் இன்று யார் நன்றாக நடித்தார்களோ அவருக்கு ஒரு ஆயிரம் ரூபாய் கொடுப்பார் அதுபோல நன்றாக வேலை செய்த டெக்னீசியனுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பார் அவர்களும் உற்சாகத்துடன் வேலை செய்வார்கள்..

இந்த படம் பார்க்கும் உங்களுக்கு திரில்லரா இருக்கும்… ஆனால் செட்டில் வேலை செய்த எங்களுக்கு ரொமான்டிக்காக இருந்தது.. ஐ லவ் யூ சார்.. மிஷ்கின் சார் அன்பாக இருந்தாலும் அறிவாக இருந்தாலும் அடுத்த வருடம் அதை பகிர்ந்து கொள்வார்… “என்று பேசினார் விஜய் சேதுபதி..

 

Vijaysethupathi and Parthiban speech at Train Teaser launch

 

 

 

 

Related articles