ரஜினியுடன் கைகோர்த்த உதயநிதி நிறுவனம்.; வசூல் வேட்டைக்கு தயாரான ‘வேட்டையன்’

ரஜினியுடன் கைகோர்த்த உதயநிதி நிறுவனம்.; வசூல் வேட்டைக்கு தயாரான ‘வேட்டையன்’

 

 

ரஜினியுடன் கைகோர்த்த உதயநிதி நிறுவனம்.; வசூல் வேட்டைக்கு தயாரான ‘வேட்டையன்’

 

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ படம் அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு திரைக்கு வருகிறது.

அனிருத் இசையில் உருவான இந்த படத்தை பிரம்மாண்டமாக லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

‘ஜெய்பீம்’ பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் இணைந்துள்ள இந்திய திரை உலகின் பிரபல நட்சத்திரங்கள்தான்..

ரஜினியுடன் அமிதாப்பச்சன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்து நடித்துள்ளார்.. அது மட்டும் இல்லாமல் அமிதாப்பச்சன் முதன்முறையாக நேரடியாக நடிக்கும் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் மஞ்சு வாரியார், பகத் பாசில், ரானா டகுபதி, ரோகினி, அபிராமி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அக்டோபர் 10ஆம் தேதி தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

ரஜினியின் வேட்டையன் திரைப்படம் திரைக்கு வருவதால் சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படம் தள்ளிப் போடப்பட்டது.. அதுபோல மலையாளத்தில் பகத் பாசில் தயாரித்து நடித்த நடித்த ஒரு திரைப்படமும் தள்ளிப்போனது.

‘வேட்டையன்’ பட தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.. இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். 2 மணி நேரம் 47 நிமிடம் ரன்னிங் டைம் கொண்ட திரைப்படமாக வேட்டையன் உருவாகியுள்ளது..

மேலும் வேட்டையன் படக்குழுவினர் பல கல்லூரி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு படத்திற்கு ப்ரமோஷன் செய்து வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரம் ரஜினியுடன் ஜெய் பீம் என்ற சமூக சிந்தனை உள்ள படத்தை இயக்கிய ஞானவேல் இணைந்திருப்பதால் வேட்டையன் படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. மேலும் இந்திய திரை நட்சத்திரங்கள் பலரும் இணைந்துள்ளதால் வேட்டையன் பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டையாடும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

Vettaiyan release and collection expectations