அந்தகன் 50… GOAT 25… பிரகாசிக்கும் பிரஷாந்த்.; பரவசத்தில் ரசிகர்கள்
அந்தகன் 50… GOAT 25… பிரகாசிக்கும் பிரஷாந்த்.; பரவசத்தில் ரசிகர்கள்
1990களில் வைகாசி பொறந்தாச்சு, ஆணழகன், ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், தமிழ், ஜோடி, பிரியாத வரவேண்டும், பார்த்தேன் ரசித்தேன், விரும்புகிறேன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்து இளம் தலைமுறை நாயகர்களில் டாப் ஸ்டார் ஆக விளங்கியவர் பிரசாந்த்..
இதனால் பெண் ரசிகைகள் மத்தியில் பிரசாந்த் படத்துக்கு ஏராளமான எதிர்பார்ப்புகள் இருந்தன.
ஆனால் அதன் பின்னர் சில காரணங்களால் படங்களின் நடிப்பதை குறைத்துக் கொண்டார் பிரசாந்த்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் தந்தை தியாகராஜன இயக்கத்தில் பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ படம் கடந்த மாதம் ஆகஸ்ட் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்த படத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, சிம்ரன், பிரியா ஆனந்த், வனிதா விஜயகுமார், கார்த்திக், ஆதேஷ் பாலா உள்ளிட்ட பலரும் பிரசாந்துடன் இணைந்து நடித்திருந்தனர்.
இந்தப் படத்திற்கு முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே வந்தன. தற்போது இந்த படம் 55 நாட்களைக் கடந்து இன்னும் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.
மேலும் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த் இணைந்து நடித்த கோட் திரைப்படமும் 25 நாட்களைக் கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அந்தகன் 50-வது நாள்.. கோட் திரைப்படம் 25 வது நாள் என பிரசாந்த் மீண்டும் வெற்றி படங்கள் வரிசையில் இணைந்துள்ளார்.
எனவே பிரசாந்த் படங்களை மீண்டும் ரசிகர்கள் தற்போது ஆவலாக எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.. எனவே அவரது அடுத்த அடுத்த படங்களின் அப்டேட்டுகளை இனி விரைவில் காணலாம்.
‘அந்தகன்’ பட சந்திப்பில் சமுத்திரக்கனி உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக பிரசாந்த் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Top star Prashanth new movie updates

