JUST IN இலக்கியவாதி பட்டிமன்ற பேச்சாளர் நடிகர் சாலமன் பாப்பையா காலமானார்
JUST IN இலக்கியவாதி பட்டிமன்ற பேச்சாளர் நடிகர் சாலமன் பாப்பையா காலமானார்
பிரபல பட்டிமன்ற பேச்சாளர், எழுத்தாளர், தமிழறிஞரும் இலக்கியவாதியுமான சாலமன் பாப்பையா இன்று காலமானார்.
தமிழுக்காகவே வாழ்ந்து தமிழுக்காகவே மறைந்தவர் என்றும் சொல்லலாம்..
12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் பேசி மாபெரும் சாதனை படைத்தவர். சாலமன் பாப்பையா அவர்கள், இன்று தனது 90வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்..
மதுரையைச் சேர்ந்த புகழ்பெற்ற ஒரு தமிழறிஞர். இனிய தமிழில் நீண்ட நேரம் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்த ஒரு பேச்சாளர்.
பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்… ஏவிஎம் நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார் சாலமன் பாப்பையா..
தற்போது மதுரையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.. தமிழ் அறிஞர்கள், திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள், உள்ளிட்ட அனைவரும் சாலமன் பாப்பையா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இன்று செப்டம்பர் 11ஆம் தேதி மகாகவி பாரதியார் இறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது..
சாலமன் என்பது இவரது இயற்பெயர் பாப்பையா என்பதை இவரது தந்தையார் பெயர் இரண்டையும் இணைத்து சாலமன் பாப்பையா என்று அழைக்கப்பட்டார்..
Tamil Speaker Actor Solomon Pappaiah passed away
#RIPSolomonPappaiah
#SolomonPappaiah
#RIPசாலமன்பாப்பையா

