தமிழ் படங்களில் ‘கங்குவா’ சாதனை..; ‘பாகுபலி’ உருவாக சூர்யா காரணம்.. – ராஜமௌலி
தமிழ் படங்களில் ‘கங்குவா’ சாதனை..; ‘பாகுபலி’ உருவாக சூர்யா காரணம்.. – ராஜமௌலி
நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படம் உலகம் எங்கும் வெளியாகிறது.
திஷா பதானி, பாலிவுட் நடிகர் பாபி தியோல், கிச்சா சுதீப், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்ரமணியம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக சூர்யா மற்றும் படக்குழுவினர் இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் சுற்றுப்பயணம் செய்து புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கு பதிப்பு ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அவர் பேசும்போது…
கஜினி படத்தின் போது, அந்தப்படத்தை புரோமோட் செய்ய சூர்யா இங்கே வந்திருந்த விதம் தெலுங்கு திரை உலகுக்கு பெரிய இன்ஸ்பிரேஷன் ஆக அமைந்திருந்தது..
பாகுபலி திரைப்படத்தை நான் எடுக்க இன்ஸ்பிரேஷன் சூர்யாதான் என்றதும் சூர்யா மேடைக்கு வந்து ராஜமெளலியை கட்டியணைத்தார்.
எனக்கு சூர்யாவை அவ்வளவு பிடிக்கும். அவர் திரையில் தோன்றும் விதம் அவ்வளவு பிடிக்கும்.
பாகுபலி படத்தின் வாய்ப்பை மிஸ் செய்துவிட்டதாக சூர்யா கூறினார். நீங்கள் எடுத்த முடிவை நான் மிகவும் மதிக்கிறேன். ஏனென்றால் நீங்கள் இயக்குநர் யார் என்பதை மீறி, கதை எப்படி இருக்கிறது என பார்த்தீர்கள்.. ” என்றார்.
இயக்குனர் சிவா பேசும்போது…
கங்குவன் என்பது ஒரு மொழி. படத்தின் போஸ்டரில் கங்குவன் என்ற பெயருக்கு மேலே இடம் பெற்றுள்ள எழுத்தானது வட்டெழுத்து பழங்காலத் தமிழ் ஆகும். இது 3ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு வழக்கத்தில் இருந்தது. கங்கு என்றால் ’நெருப்பு’… கங்குவா என்றால் நெருப்பு சக்தி கொண்ட மனிதன் என்பதாகும்”
‘கங்குவா’ படத்தை அமேசான் ஓடிடி தளம் ₹ 80 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாம். இந்தி, தெலுங்கு, KGF 2 ஆகிய படங்கள் மட்டுமே இந்தச் சாதனையைச் செய்துள்ளதாம். இதுவரை எந்த தமிழ்ப் படமும் இந்த சாதனையை எட்டவில்லை என சொல்லப்படுகிறது..
கங்குவா படத்தின் ட்ரெய்லரும் தற்பொழுது வெளியாகி இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.. இது ரசிகர்களை கொண்டாடும் விதமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சிவா..
Suriya is reason for Bahubali says Rajamouli

—-

