பாட்ஷா ஸ்டைல் சீன் சாய்பாபா படத்தில் வேணும்னு சொன்னாங்க..; ‘அனந்தா’ குறித்து சுரேஷ் கிருஷ்ணா
பாட்ஷா ஸ்டைல் சீன் சாய்பாபா படத்தில் வேணும்னு சொன்னாங்க..; ‘அனந்தா’ குறித்து சுரேஷ் கிருஷ்ணா
மறைந்த புட்டபர்த்தி சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாளை ஒட்டி, அவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள அனந்தா படத்தின் இசை வெளியீட்டு விழா, ராயப்பேட்டை, தி மியூசிக் அகாடமியில் நடந்தது.
வரும் நவம்பர் 23ம் தேதி நேரடியாக OTT தளத்தில் வெளியாக உள்ளது.
இந்த விழாவில் சுகாசினி, தலைவாசல் விஜய், ஒய் ஜி மகேந்திரன், இசையமைப்பாளர் தேவா, இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, நடிகை அபிராமி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்..

இப்படம் குறித்து பாடலாசிரியர் பா.விஜய் பேசுகையில்.. ” அனந்தா , திரை படைப்பு என்பதைவிட, இறை படைப்பு எனலாம். ”இதற்கு முன், இறை சார்ந்த பாடல்கள் நிறைய எழுதியுள்ளேன். ஆனால் முதல் முறையாக இறைவனுக்கே பாடல் எழுதிய அனுபவம் இந்த படத்தில் தான் கிடைத்தது,” என்று பேசினார்..

படம் குறித்து, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் ரத்னாகர் பேசியதாவது..
பாபாவிற்கு, சீனாவில் சாய் மந்திராலயம் எழுப்பப்பட்டுள்ளது. அங்கு, 10 – 12 அடி உயரத்தில் அவரது உருவப்படம் நிறுவப்பட்டுள்ளது.
அது போல் தமிழக பக்தர்களால், உருவானது தான் அனந்தா திரைப்படம். சாய்பாபாவின் 100வது பிறந்த நாளன்று இப்படம் வெளியிடுவது கூடுதல் சிறப்பு. இது ஒரு பக்தி சார்ந்த அனுபவம்”.
இவ்வாறு அவர் பேசினார்..

இந்தப் படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பேசும் போது…
சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டும் என்ற திட்டம் எங்களை அறியாமல் 2009-இல் ஏற்பட்டது.
சாய் அவர்களை சந்தித்தேன்.. அவர் பாபா படம் எடுக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்.. அது மட்டும் இல்லாமல் அவர் பாட்ஷா மாதிரியான சீன்கள் வேண்டும்.. கமர்சியல் இருக்க வேண்டும் என்றார். அது எப்படி முடியும் என்றெல்லாம் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஒரு முறை 2009 முதன்முறையாக நான் புட்டபர்த்தி சென்று இருந்தேன்.? அப்போது சாய்பாபா சந்தித்தேன் அப்போது.. அவர் வீல் சேரில் வந்து கொண்டிருந்தார். ஏன் தெரியவில்லை.. என்னை பார்த்ததும் நின்று தெலுங்கில் பேசினார்.. அவர் பேசும்போது.. “இத்தனை நாள் எங்கிருந்தாய் ஏன் பார்க்க வரவில்லை என்று கேட்டார..” எனக்கு அது பெரிய ஆச்சரியமாக இருந்தது.. அது நடந்து சில வருடங்களில் அவர் மரணம் அடைந்து விட்டார்.
அதன் பின்னர் 2024 என் கனவில் ஒருமுறை வந்தார். அப்போது அவர் கையில் இருந்து விபூதி வருவதாக நான் கனவு கண்டேன்.. அது முடிந்து சில தினங்களில் அதிகாலை 3:30 மணிக்கு எழுந்தேன்… ஏதோ ஒரு மாற்றம் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன்..
அப்போது திடீரென இந்த கதையை எழுத தொடங்கினேன்.. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் சாய்பாபா மகிமை குறித்து கதையை எழுதி முடித்து விட்டேன்.”
இவ்வாறு அனந்தா படம் உருவான விதம் குறித்து இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பேசினார்..
Suresh Krishna and Pa Vijay speech at Anandha audio launch

