‘மாமன்’ வெற்றி பெற மண்சோறு சாப்பிட்ட ரசிகர்கள்..; ஆனா சூரி ரியாக்சன் வேற மாதிரி..¡

‘மாமன்’ வெற்றி பெற மண்சோறு சாப்பிட்ட ரசிகர்கள்..; ஆனா சூரி ரியாக்சன் வேற மாதிரி..¡

‘மாமன்’ வெற்றி பெற மண்சோறு சாப்பிட்ட ரசிகர்கள்..; ஆனா சூரி ரியாக்சன் வேற மாதிரி..¡

 

கதையின் நாயகனாக நடிகர் சூரி பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்..

இந்த நிலையில் இன்று சூரி நடிப்பில் திரைக்கு வந்துள்ள திரைப்படம் ‘மாமன்’.

இந்த படம் அக்கா – தம்பி உறவை பற்றியும் தாய்மாமன் உறவு பெருமை பற்றி பேசும் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது.

இதற்கு குடும்பங்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இந்த படத்தை ‘விலங்கு’ வெப் சீரிஸ் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கியிருக்கிறார். இவரது மகன் இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார்.. இந்த நிலையில் சூரியின் ‘மாமன்’ படம் வெற்றி பெற வேண்டி சூரி ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது..

இவரது நடிப்பில் உருவாகியுள்ள அதாவது மே 16ஆம் தேதி வெளியாகியுள்ள படம் ‘மாமன்’.

இதனை முன்னிட்டு மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்தில் மண் சோறு சாப்பிட்டு வேண்டுதல் செய்துள்ளனர். சூரியின் பெயரில் சிறப்பு அர்ச்சனையும் செய்து வழிபட்டு உள்ளனர்..

ஆனால் ரசிகர்களின் செயலை கண்டித்து இருக்கிறார் நடிகர் சூரி.. இதுபோல ரசிகர்கள் செய்யக்கூடாது.. இவர்கள் செய்தது முட்டாள்தனம்.. அந்த பணத்திற்கு பதிலாக பல ஆதரவற்றோருக்கு உணவளித்திருக்கலாம்.. அவர்கள் என் ரசிகர்கள் சொல்ல தகுதியற்றவர்கள்” என்று விமர்சித்து இருக்கிறார் நடிகர் சூரி..

Soori fans ate Soil Food for Maaman success