தொடங்கியாச்சு ‘பராசக்தி: பஞ்சாயத்து..; சிவகார்த்திகேயன் Vs விஜய் ஆண்டனி

தொடங்கியாச்சு ‘பராசக்தி: பஞ்சாயத்து..; சிவகார்த்திகேயன் Vs விஜய் ஆண்டனி

 

தொடங்கியாச்சு ‘பராசக்தி: பஞ்சாயத்து..; சிவகார்த்திகேயன் Vs விஜய் ஆண்டனி

 

 

‘பராசக்தி’ இந்த பெயரை தமிழ் சினிமா ரசிகர்களால் என்றும் மறக்க முடியாது.. ஏவிஎம் தயாரிப்பில் கருணாநிதி கதை வசனத்தில் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம் ‘பராசக்தி’. சிவாஜி கணேசன் அறிமுகமான சினிமா இதுதான்.

அதன் பிறகு சிவாஜி-க்கு வந்த வாய்ப்புகளும் சினிமாவில் சிவாஜி கொடி கட்டி பறந்ததும் நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்குப் பிறகு ‘பராசக்தி’ என்ற பெயரில் இரு படங்களின் அறிவிப்பு ஒரே நாளில் இன்று 2025 ஜனவரி 29ஆம் தேதி வெளியாகி தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

அதன் பற்றிய விவரம் வருமாறு…

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் & ஜெயம் ரவி & அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘பராசக்தி’. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.. இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது..

மேலும் விஜய் ஆண்டனி நடித்து வரும் படத்திற்கு ‘பராசக்தி’ என தலைப்பிடப்பட்டுள்ளது.. ‘அருவி’ மற்றும் ‘வாழ்’ ஆகிய படங்களை இயக்கிய அருண் பிரபு இந்த படத்தை இயக்க விஜய் ஆண்டனி இசையமைக்கிறார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் & ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ‘பராசக்தி’ என்ற பெயரிலும் தமிழில் ‘சக்தித் திருமகன்’ என்ற பெயரிலும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி தரப்பில் ஓர் அறிக்கை வெளியாகி உள்ளது.. அதில் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் தரப்பில் 2024 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் ‘பராசக்தி’ என்ற தெலுங்கு பட தலைப்பை ஏற்கனவே பதிவு செய்து விட்டோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இது சிவகார்த்திகேயன் படக்குழுவினருக்கு பெரும் பிரச்சனையாக எழும் என எதிர்பார்க்கப்படுகிறது..

ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து நாங்கள் பராசக்தி என்ற தலைப்பை அதிகாரப்பூர்வமாக பெற்றுவிட்டோம் என சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக பராசக்தி பட குழுவினரும் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்..

இது மட்டும் இல்லாமல் ஏற்கனவே சிவாஜி கணேசன் ரசிகர்கள் தரப்பில் பராசக்தி என்ற தலைப்பிற்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது. சிவாஜி பேரவை சார்பில் இது தொடர்பான அறிக்கையும் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது..

‘பராசக்தி’ என்ற பெயரின் பஞ்சாயத்து இப்போதே தொடங்கி விட்டது.. ஒருவேளை படக்குழுவினர் தங்களது சூழ்நிலையை புரிந்து கொண்டு யாராவது ஒருவர் முன்வந்து தலைப்பை மாற்றினால் சரியாகும்.. இல்லை என்றால் ரசிகர்கள் மத்தியில் தான் எந்த பராசக்தி யார் நடித்தது? என்று குழப்பம் நீடிக்கும் என்பதில் ஐயமில்லை..

Sivakarthikeyan Vs Vijay Antony Parasakthi title issue Panchayat

No more waiting⚡
No more countdowns⏳
The revolution starts NOW🔥

Here’s the #Parasakthi Tamil Title Teaser✊🏻

Tamil Teaser Link 🔗 https://youtu.be/mK0QTleAg8k

@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @redgiantmovies_ @Aakashbaskaran @DawnPicturesOff @sreeleela14 @dop007 @editorsuriya @arvaround #BindiyaChhabria @supremesundar @devramnath @rhea_kongara @deathbycheesy @PoornimaRamasw1 @BrindhaGopal1 @KrutiMahesh @deepakbhojraj #KVSanjit @gopiprasannaa @SureshChandraa @abdulnassaroffl @DoneChannel1 @teamaimpr #DawnPictures