அன்று தனுஷ் உடன் வந்திருந்தேன்..; இன்று அடித்து வீசினாலும் தூக்கும் ரசிகர்கள்.. – சிவகார்த்திகேயன்
அன்று தனுஷ் உடன் வந்திருந்தேன்..; இன்று அடித்து வீசினாலும் தூக்கும் ரசிகர்கள்.. – சிவகார்த்திகேயன்
70வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தென்னிந்தியாவின் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர், நடிகர் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது.
இதில் அமரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சிவகார்த்திகேயன் வென்றார்.. மேலும் சிறந்த நடிகை சாய் பல்லவி சிறந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோரும் விருதுகள் பெற்றனர்..
விருது வாங்கிய பிறகு சிவகார்த்திகேயன் பேசும்போது…
“13 ஆண்டுகளுக்கு முன் ஃபிலிம்ஃபேர் நிகழ்ச்சிக்கு தனுஷ் சாருடன் வந்திருந்தேன். ஜாலியாக சென்று வருவோம் என்று தனுஷ் என்னை அழைத்து வந்திருந்தார்.
அப்போது எனக்கு இரண்டாவது வரிசையில் அமர இருக்கை வழங்கப்பட்டது. அங்கிருந்து முதல் வரிசையில் இடம் கிடைக்க எனக்கு 13 ஆண்டுகள் ஆனது…

அமரன் படத்திற்காக ஒப்பந்தம் செய்யும் போது, கமல் சார் அலுவலகத்தில் நிறைய விருதுகள் இருந்தன. எனக்கு இது போதும் இனி இளம் திறமைசாலிகள் விருது பெற வேண்டும்” என்று கூறினா்.
அப்போது எனக்கு அமரன் திரைப்படத்திற்காக இந்த விருது கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். அது தற்போது நடந்திருக்கிறது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் கதை தான் இந்த விருது கிடைக்க முக்கிய காரணம்.
என்னை எவ்வளவு அடித்து, தூக்கி வீசினாலும், தொடர்ந்து என்னை தூக்கி பிடிப்பது என் ரசிகர்கள் தான். உங்களுக்கு பிடித்த சிவா அண்ணா இன்று ஃபிலிம்ஃபேர் விருதுடன் நிற்கிறேன்,”
என்று பேசினார் நடிகர் சிவகார்த்திகேயன்..
Sivakarthikeyan speech about Dhanush at Filmfare award function
—

