JUST IN ரஜினி – கமல் கூட மாறிட்டாங்க.. சீமான் நீ சொன்னா கேட்பாங்க.. ‘பேரன்பும் பெருங்கோபமும்’ விழாவில் RV உதயகுமார் பேச்சு
JUST IN ரஜினி – கமல் கூட மாறிட்டாங்க.. சீமான் நீ சொன்னா கேட்பாங்க.. ‘பேரன்பும் பெருங்கோபமும்’ விழாவில் RV உதயகுமார் பேச்சு
சிவப்பிரகாஷ் இயக்கத்தில் இளையராஜா இசையில் தங்கர் பச்சான் வழங்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’.
‘பேரன்பும் பெருங்கோபமும்’ பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நாயகன் விஜித் பச்சான் , இயக்குனர் சிவப்பிரகாஷ் ஆகியோருடன்…
சிறப்பு விருந்தினர்கள்.. டைரக்டர் S.A. சந்திரசேகர், சீமான், டைரக்டர் கரு. பழனியப்பன், சித்ரா லட்சுமணன், நடிகை தேவயானி, டைரக்டர் R.V. உதயக்குமார், வசந்தபாலன், பாடலாசிரியர் சினேகன், டைரக்டர் தங்கர்பச்சான் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்..
விழாவில் R.V. உதயக்குமார் பேசும்போது…
“இப்போது சினிமா முன்பு போல இல்லை.. கார்பொரேட் கையில் சினிமா போய்விட்டது.. எனவே சினிமாவில் வன்முறை ஆகிவிட்டது..
ரஜினி & கமல் போன்ற நடிகர்களும் மாறிட்டாங்க.. இனி சினிமா எப்படி உருப்படும்.?. இப்போது ஒரு படங்களும் மனதில் நிற்பதில்லை.. நாம் கற்பனையில் நினைத்து பார்க்க முடியாத துப்பாக்கி போல ஆயுதம் வைத்து இருப்பார்கள்..
சினிமா மாறனும்.. நல்லா சினிமா வரணும்.. அட்லீஸ்ட் பெரிய நடிகர்கள் சில படங்கள் கவிதைத்தனமான படங்களில் நடிக்கணும்..
சீமான் நீ சொல்லுப்பா.. நீ சொன்னா தான் கேக்குறாங்க..
இவ்வாறு RV உதயகுமார் பேசினார்..

கவிஞர் சினேகன் பேசும்போது…
‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தை நேற்று சீமான் உடன் பார்த்தேன்.. ஜாதிக்கு எதிரான படம் தான்.. அருமையான படம்.. நல்ல கதைக்கு பிரம்மாண்டம் தேவை இல்லை..
இயக்குனர் சுசீந்திரன் பேசும்போது…
அழகர்சாமி குதிரை படத்தில் இளையராஜா உடன் பணி புரிந்து இருக்கிறேன்.. அவர் இந்த படத்திற்க்கு கிடைத்து இருப்பது வரம்.. இப்படி ஒரு கதை நான் இது வரை பார்க்கவில்லை.. நல்ல ஹீரோ விஜித் தமிழ் சினிமாவுக்கு கிடைத்து இருக்கிறார்..
Seeman SAC at Peranbumum perungobamum audio launch

