கன்றுக்குட்டியை வைத்து கவிதைத்தனமான முடிவு.; தனுஷின் ‘இட்லி கடை’-யை ரசித்த சீமான்

கன்றுக்குட்டியை வைத்து கவிதைத்தனமான முடிவு.; தனுஷின் ‘இட்லி கடை’-யை ரசித்த சீமான்

கன்றுக்குட்டியை வைத்து கவிதைத்தனமான முடிவு.; தனுஷின் ‘இட்லி கடை’-யை ரசித்த சீமான்

 

 

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது..

இந்த படத்தில் அருண் விஜய், ராஜ்கிரண், நித்யா மேனன், இளவரசு, சத்யராஜ், ஷாலினி பாண்டே, கீதா கைலாசம் உள்ளிட்ட பல நடித்திருந்தனர்.

 

ஜி வி பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருந்தார்.

இந்த படம் வெளியான நாள் முதலே பாசிட்டி விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது..

இந்நிலையில், இட்லி கடை திரைப்படத்தை பார்த்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டி பேசியுள்ளார்..

அதில்… “கன்றுக்குட்டியை வைத்து கவிதைத்தனமான முடிவு, இப்படி ஒரு வாழ்வியலை பதிவு செய்தது பாராட்டுக்குரியது.

நேர்த்தியான திரைக்கதை நகர்வை உணர முடிந்தது.

இளம் வயதில் முதிர்ந்த படைப்பாற்றல் திறன் கொண்டுள்ளார். இப்படத்தை பார்த்தபின், நாம் எல்லோரும் நம் வேர்தேடி பயணிப்போம்..

மன நிறைவோடு ‘இட்லி கடை’ படத்தை பார்த்து ரசித்தேன். ஒவ்வொரு காட்சிகள் நகரும்போது மகிழ்ந்து நெகிழ்ந்தேன். தம்பி தனுஷுக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்..

 

Seeman appreciates Dhanush direction in Idli Kadai movie