கடுப்புல இருக்கீங்க.. Wait Worth இருக்கும்.. ‘கருப்பு’ ரிலீஸ் அப்டேட் கொடுத்த RJB
கடுப்புல இருக்கீங்க.. Wait Worth இருக்கும்.. ‘கருப்பு’ ரிலீஸ் அப்டேட் கொடுத்த RJB
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக எஸ் ஆர் பிரபு தயாரித்துள்ள திரைப்படம் ‘கருப்பு’..
இந்த படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க RJB ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ளார்.
இந்த படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் அப்டேட் வேண்டும் என ரசிகர்கள் பலரும் ஆர்ஜே பாலாஜியை இணையதளத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் காரில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்… ஆர் ஜே பாலாஜி அந்த வீடியோ பதிவில்..
சூர்யா ரசிகர்கள் என் மீது செம கடுப்பில் இருக்கிறார்கள்.. ஆனால் உங்கள் காத்திருப்புக்கு நிச்சயம் வொர்த் இருக்கும்.. கருப்பு திரைப்படம் அப்டேட் விரைவில் வெளியாகும் ஆனால் நீங்கள் நினைப்பது போல ஏப்ரல் 10 தேதி படம் வெளியாகாது எனவும் அறிவித்துள்ளார்..

மேலும் இயக்குனருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சண்டை பேய்க்கும் பேய்க்கும் சண்டை என்பது போல மீம்ஸ்ல் வருகின்றன என்பதையும் கலாய்த்து இருக்கிறார் ஆர் ஜே பாலாஜி..
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகிய கருப்பு திரைப்படத்தில் சூர்யாவுடன் இந்திரன்ஸ், ஸ்வாசிகா, த்ரிஷா, அனகா மாயா ரவி, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..
இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஜி.ஜே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்து உள்ளனர்..
RJB gives update on Suriya Karuppu movie

