ஆர் ஜே பாலாஜி நடிக்கும் ‘சொர்க்கவாசல்’..; திறந்து வைத்த இயக்குனர் ரஞ்சித்
ஆர் ஜே பாலாஜி நடிக்கும் ‘சொர்க்கவாசல்’..; திறந்து வைத்த இயக்குனர் ரஞ்சித்
ஒரு பக்கம் ஹீரோவாக கலக்கி கொண்டிருக்கும் ஆர் ஜே பாலாஜி மற்றொருபுறம் இயக்குனராகவும் பிஸியாக வருகிறார்.
விரைவில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ரகுமான் இசையில் சூர்யா நடிப்பில் உருவாக உள்ள படத்தை இயக்க உள்ளார் ஆர் ஜே பாலாஜி.
மற்றொருபுறம் மீண்டும் நாயகனாக ‘சொர்க்கவாசல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.. அது பற்றிய விவரம் வருமாறு..
இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த சித்தார்த் விஸ்வானந்த் இயக்குநராக அறிமுகமாகும் படம் தான் ‘சொர்கவாசல்’.
எழுத்தாளர் தமிழ் பிரபா படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.
கிறிஸ்டோ சேவியர் இசையமைக்க பிரின்ஸ் ஆன்டர்சன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை செல்வா கவனிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஸ்லைட்டை கையில் வைத்துக்கொண்டு நிற்கிறார் ஆர் ஜே பாலாஜி.. இதில் மத்திய சிறைச்சாலை மெட்ராஸ் 1999 என எழுதப்பட்டுள்ளது.. எனவே இது 1999 இல் நடக்கும் கதை என கருதலாம்.
Rj Balaji starring Sorgavasal first look
————

