‘வேட்டையன் பார்ட் 2’ : ரஜினி & பகத்தின் ஃப்ளாஷ் பேக்..: ஞானவேலின் ரகசியம்

‘வேட்டையன் பார்ட் 2’ : ரஜினி & பகத்தின் ஃப்ளாஷ் பேக்..: ஞானவேலின் ரகசியம்

 

 

 

‘வேட்டையன் பார்ட் 2’ : ரஜினி & பகத்தின் ஃப்ளாஷ் பேக்..: ஞானவேலின் ரகசியம்

 

 

லைக்கா தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘வேட்டையன்’.

இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், ராணா, பகத், மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் ‘வேட்டையன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.

இதற்கு பதிலளிக்க விதமாக ஞானவேல் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…

வேட்டையன் பார்ட் 2 படத்தை இயக்கும் எண்ணம் உள்ளது.. அதற்கு ரஜினிகாந்த் சார் ஒத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அந்த படத்தில் ரஜினியின் அதியன் கேரக்டர் எப்படி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக உருவானது..

பகத்ஃபாசிலின் பேட்டரி கேரக்டர் திருடனாக உருவானது எப்படி என்பதையும் சொல்ல வேண்டும்.. அதாவது வேட்டையன் படத்தின் தொடர்ச்சி என்பதை விட வேட்டையனுக்கு (Vettaiyan Prequel) முன்பு என்பதே பொருத்தமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார் ஞானவேல்..

Gnanavel spokes about Vettaiyan Prequel