பட்டைய கிளப்பும் ‘படையப்பா’ ரீ-ரிலீஸ் வசூல்..; என்றுமே கலெக்ஷன் ராஜா நீ ரஜினி..

பட்டைய கிளப்பும் ‘படையப்பா’ ரீ-ரிலீஸ் வசூல்..; என்றுமே கலெக்ஷன் ராஜா நீ ரஜினி..

பட்டைய கிளப்பும் ‘படையப்பா’ ரீ-ரிலீஸ் வசூல்..; என்றுமே கலெக்ஷன் ராஜா நீ ரஜினி..

 

1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் ‘படையப்பா’.

கதை எழுதி இந்த படத்தை தயாரித்து நாயகனாக நடித்திருந்தார் ரஜினிகாந்த்.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய இந்த படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, மணிவண்ணன், லட்சுமி, வடிவுக்கரசி, நாசர், பிரகாஷ்ராஜ், மன்சூர் அலிகான், அனு மோகன், அப்பாஸ், செந்தில், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்..

வைரமுத்து பாடல்கள் எழுத ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்… இதில் இடம் பெற்ற…எம்பேரு படையப்பா… கிக்கு ஏறுது… மின்சாரக் கண்ணா சுத்தி சுத்தி வந்தீங்க.. உள்ளிட்ட அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது..

‘படையப்பா’ ரஜினியை மிரட்டும் வில்லியாக நீலாம்பரி கேரக்டரில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகர் ரம்யா கிருஷ்ணன்..

25 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த படம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. முக்கியமாக அப்போது ஜெயலலிதா ரஜினிகாந்த் மோதலை குறித்து இந்த படம் பேசப்பட்டதாக விவாதிக்கப்பட்டது.

மேலும் இந்த படத்தை பார்த்த அப்போதைய முதல்வர் கருணாநிதி… படையப்பா பல சாதனைகளை உடையப்பா எனவும் பேசியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது டிசம்பர் 12ஆம் தேதி 2025 ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு இந்த படம் வேண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

வெளியான இரண்டு நாள்களிலேயே ரூ. 6 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளதாக கூறப்பட்டது.. இதுவரை ரூ. 18 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், 25 ஆண்டுகள் கழித்து வெரி ரிலீஸ் செய்து வசூல் வெற்றியைப் பெற்றுள்ளது..

ரஜினியின் புதிய படம் வந்தாலும் பழைய படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டால் என்றுமே கலெக்ஷன் ராஜா நீ ரஜினி.. என்று திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது..

புதிய படம் வெளியானால் எப்படி ரஜினி ரசிகர்கள் கொண்டாடுவார்களோ அப்படி இப்போதும் கொண்டாடி வருகிறார்கள்.. மேலும் இன்றைய 2k kids + Genz சென்று அழைக்கப்படுபவர்களும் இந்த படத்தை திருவிழா போல கொண்டாடி வருவது மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது..

மேலும் ஒரு புதிய படத்தின் பிரமோஷன் போல ரஜினிகாந்த்தும் இந்த படத்திற்கு 30 நிமிடம் வீடியோ வெளியிட்டு ப்ரமோஷன் செய்திருந்தார்.. இந்த படத்தொகுப்பை சௌந்தர்யா ரஜினிகாந்த் எடுத்திருந்தார்..

மேலும் இதில் நடித்த அனைத்து நட்சத்திரங்களும் தற்போது புதிய பட பிரமோஷன் செய்து சினிமா சேனல்களில் வீடியோக்களில் பேட்டி கொடுத்து வருகின்றனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது..

 

Rajinis Padayappa re release movie collection