பாமக ராமதாஸ் பேரன் ஹீரோவானார்..; ‘அலங்கு’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
பாமக ராமதாஸ் பேரன் ஹீரோவானார்..; ‘அலங்கு’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
தமிழக – கேரள எல்லைப் பகுதியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை மையப்படுத்தி ‘அலங்கு’ என்ற படம் உருவாகி உள்ளது.
புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையை பதிவு செய்யும் இப்படத்தை S.P. சக்திவேல் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ‘உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ என்ற படங்களை இயக்கியவர் ஆவார்.
ஆக்சன் த்ரில்லரான இப்படத்தில் கதை நாயகனாக குணாநிதி நடித்துள்ளார்.. இவர் பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் ராமதாஸ் அவர்களின் பேரன் ஆவார்.
மேலும் மலையாள நடிகர் செம்பன் வினோத் , காளிவெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் நாய் ஒன்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது..
இத்திரைப்படத்தில் மனிதனுக்கும் நாயுக்கும் மோதல் என்பதை மையப்படுத்திய போஸ்டர்கள் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தை D.சபரிஷ் , S.A.சங்கமித்ரா இருவரும் முறையே இணைந்து தயாரித்து இருக்கின்றனர்.. (அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா என்பது குறிப்பிடத்தக்கது.)
2025 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த ஆண்டு 2024 டிசம்பர் 27ஆம் தேதி வருட இறுதியில் இந்த திரைப்படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
PMK Ramadoss grandson Gunanidhi starring Alangu


