தேர்தல் வருதுங்கோ.. திமுக அரசு ஆஃபர் தருதுங்கோ..; ஆனால் பொங்கல் பரிசு எல்லாருக்கும் கிடையாதுங்கோ..!

தேர்தல் வருதுங்கோ.. திமுக அரசு ஆஃபர் தருதுங்கோ..; ஆனால் பொங்கல் பரிசு எல்லாருக்கும் கிடையாதுங்கோ..!

தேர்தல் வருதுங்கோ.. திமுக அரசு ஆஃபர் தருதுங்கோ..; ஆனால் பொங்கல் பரிசு எல்லாருக்கும் கிடையாதுங்கோ..!

 

 

 

தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.23 கோடி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்க பணம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் வெளியிட்டார். அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை உண்டு என்றாலும், இதில் சர்க்கரை வகை ரேஷன் அட்டைதாரர்கள் இந்த பலனை பெற முடியாது..

இதனால் சுமார் 3.8 லட்சம் சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள் இந்த ரூ.3,000 பண உதவிக்கு தகுதியற்றவர்கள். சர்க்கரை அட்டைதாரர்கள் அரிசிக்கு பதிலாக சர்க்கரை மட்டும் வாங்குபவர்கள் என்பதால், பரிசு தொகுப்பின் முக்கிய பொருட்களான அரிசி, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு அவர்களுக்கு கிடைக்காது. இந்த அட்டைதாரர்கள் பொதுவாக ரேஷன் கடைகளில் சர்க்கரை மற்றும் பிற பொருட்களை மட்டுமே வாங்குவதால், அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் வகையில் வரமாட்டார்கள்..

வெள்ளை நிற ரேஷன் அட்டைதாரர்கள்
எந்த பொருளும் வாங்காத வெள்ளை நிற ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் பொங்கல் பரிசு கிடைக்காது. இந்த அட்டைகள் அடையாள சான்றுக்காக மட்டும் வைத்திருக்கப்படுபவை, ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்படுவதில்லை. வெள்ளை அட்டைதாரர்கள் பொதுவாக ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட வருமானம் உள்ளவர்கள், நான்கு ஹெக்டேர் அல்லது அதற்கு மேற்பட்ட பாசன நிலம் வைத்திருப்பவர்கள், அல்லது நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள். அவர்கள் பொது விநியோக அமைப்பிலிருந்து பொருட்கள் பெறுவதில்லை..

இதனால் குடும்ப அரிசி ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.3,000 பண உதவி வழங்கப்படும். இதில் சுமார் 2.23 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள். இந்த முறை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் சுமார் 19,000 குடும்பங்களும் பொங்கல் பரிசு கிடைக்கும்.

 

முந்தைய கட்டுப்பாடுகள்
2024ல், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் போன்றோர் பொங்கல் பண உதவிக்கு தகுதியற்றவர்களாக கருதப்பட்டனர். ஆனால் 2024 ஜனவரியில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நிபந்தனைகளை தளர்த்தி, அரிசி அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் பண உதவி கிடைக்கும் என்று உத்தரவிட்டார். ரூ.3000 பண உதவி ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் நேரடியாக விநியோகம் செய்யப்படும். வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு நேரடி பண பரிமாற்றம் பரிசீலிக்கப்பட்டாலும், அனைத்து ரேஷன் அட்டைகளும் செயலில் உள்ள வங்கி கணக்குகளுடன் இணைக்கப்படவில்லை என்பதால் இப்போதைக்கு நேரடி விநியோகமே நடைமுறையில் உள்ளது.

 

கடைசியாக அதிமுக ஆட்சியில் ரூ.2500 பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு நிலையில், இந்த முறை திமுக அரசு ரூபாய் 500 கூடுதலாக மொத்தம் ரூ.3000 வழங்கப்பட உள்ளது. ஏப்ரல்-மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த அறிவிப்பு அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 2025ல் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட பொங்கல் பரிசு பண உதவி இப்போது மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மட்டுமே ரூ.3,000 பண உதவிக்கு தகுதியானவர்கள் என்பதால் சர்க்கரை மற்றும் வெள்ளை அட்டைதாரர்கள் இந்த பலனை பெற முடியாது.

 

Not all TN peoples eligible for DMK Govt Pongal Gift