முதன்முறையாக கமலுடன் இணைந்த நயன்தாரா..; ரஜினியுடன் 6வது முறை கூட்டணி

முதன்முறையாக கமலுடன் இணைந்த நயன்தாரா..; ரஜினியுடன் 6வது முறை கூட்டணி

 

முதன்முறையாக கமலுடன் இணைந்த நயன்தாரா..; ரஜினியுடன் 6வது முறை கூட்டணி

 

சரத்குமார் நடித்த ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நயன்தாரா… இதனையடுத்து அடுத்த படத்திலேயே ரஜினிகாந்துடன் சந்திரமுகி படத்தில் ஜோடியாக இணைந்தார் நயன்தாரா..

இதன் பின்னர் விஜய் அஜித் சூர்யா விஷால் விக்ரம் ஆர்யா தனுஷ் சிவகார்த்திகேயன் முதல் யோகி பாபு கவின் வரை இணைந்து நடித்து விட்டார் நடித்துவிட்டார் நயன்தாரா.. ஆனால் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போதிலும் இதுவரை கமல்ஹாசன் படத்தில் இணைந்து நடிக்கவில்லை…

இந்த நிலையில் முதல் முறையாக கமல்ஹாசன் உடன் இணைந்து இருக்கிறார் நயன்தாரா.. ரஜினிகாந்த் நடித்துவரும் தர்மன் படத்தில் இணைந்திருப்பதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்..

www.rightnewsraja.com

கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த ‘தர்மன்’ திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.. இதில் ரஜினிகாந்த் டாக்டராக நடித்து வருகிறார்..

இதில் ஏற்கனவே கதையின் நாயகிகளாக சிம்ரன் மற்றும் ராசி கண்ணா இணைந்து நடித்துள்ளனர்.. தற்போது நயன்தாராவும் இணைந்துள்ளார்.. .

சிவாஜி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார் நயன்தாரா.. அதன் பின்னர்.. ரஜினியுடன் சந்திரமுகி, தர்பார், அண்ணாத்த, குசேலன் உள்ளிட்ட பல படங்களில் ரஜினியுடன் நயன்தாரா இணைந்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

இதுவரை ‘தர்மன்’ படத்தின் மூன்றுகட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன..

 

Nayanthara joins in Dharman with Rajini and Kamal