‘வேட்டையன்’ லைக்கா ப்ரோமோஷன்.; ரஜினி ரசிகர்கள் ஹாப்பி.. விஜய் ரசிகர்கள் டென்ஷன்

‘வேட்டையன்’ லைக்கா ப்ரோமோஷன்.; ரஜினி ரசிகர்கள் ஹாப்பி.. விஜய் ரசிகர்கள் டென்ஷன்

 

 

‘வேட்டையன்’ லைக்கா ப்ரோமோஷன்.; ரஜினி ரசிகர்கள் ஹாப்பி.. விஜய் ரசிகர்கள் டென்ஷன்

 

கடந்த அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘வேட்டையன்’ திரைப்படத்தை ரிலீஸ் செய்தது லைக்கா நிறுவனம்.

இந்த படம் தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகமெங்கும் வெளியானது.

ஞானவேல் இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகினி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்த படம் வெளியான 5 தினங்களில் ரூபாய் 300 கோடியை வசூலித்து தற்போதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆனால் சமூக வலைத்தளங்களில் வேட்டையன் படத்தை படத்திற்கு நெகடிவ் கமெண்ட்கள் கொடுத்து படத்திற்கு மோசமான விமர்சனங்களை விஜய் ரசிகர்கள் கொடுத்து வந்தனர்.. ஆனாலும் படத்திற்கு மக்களின் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் படத்தின் வெற்றியால் மகிழ்ந்துள்ள ரஜினி மற்றும் படக்குழுவினர் சமீபத்தில் சந்தித்து வெற்றியை கொண்டாடினர்.. மேலும் இந்த படத்தின் விளம்பர போஸ்டர் & வீடியோ அதிரடியாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறது லைக்கா நிறுவனம்.

மேலும் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளையும் வெளியிட்டது. அதில் ரஜினி மற்றும் பகத் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த காட்சிகளை ஏன் நீக்கினீர்கள் படத்தில் வைத்திருக்கலாமே.. என ரசிகர்கள் கமெண்ட் பற்றி தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அடுத்த வீடியோவில் முத்து படத்தில் ரஜினி பேசிய வசனத்தை வேட்டையன் படத்தில் பகத் பேசுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுவும் ரசிகர்களை கவர்ந்து உள்ளதால் இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது..

இதனால் ஒரு பக்கம் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியாகவும் விஜய் ரசிகர்கள் வருத்தத்திலும் உள்ளனர்.

Lycas Vettaiyan promotion Rajini and Vijay fans reaction