பாட்ஷா பஞ்ச்.. ‘காலா’ ரஜினி ஸ்டைலில் ‘கருப்பு’ சூர்யா..; பிறந்தநாளில் RJB விருந்து

பாட்ஷா பஞ்ச்.. ‘காலா’ ரஜினி ஸ்டைலில் ‘கருப்பு’ சூர்யா..; பிறந்தநாளில் RJB விருந்து

 

பாட்ஷா பஞ்ச்.. ‘காலா’ ரஜினி ஸ்டைலில் ‘கருப்பு’ சூர்யா..; பிறந்தநாளில் RJB விருந்து

 

 

ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி (RJB) இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா நாயகியாக நடிக்க, ஸ்வசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர்.

படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஜூலை 23ஆம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விதமாக கருப்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டுள்ளார் நடிகரும் இயக்குநருமான ஆர் ஜே பாலாஜி..

இதில் கருப்பு கண்ணாடி.. கருப்பு பொட்டு கருப்பு சட்டை கருப்பு வேஷ்டி, கருப்பு செருப்பு உள்ளிட்டு அனைத்தும் கருப்பு மையமாகவே ரஜினியின் ‘காலா’ ஸ்டைலில் நடிகர் சூர்யா தோற்றம் அளித்துள்ளார்.

 

இதில் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார்.. ‘ஜெய் பீம்’ படத்திற்குப் பிறகு இவர் வழக்கறிஞராக நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ளது.. அது மட்டும் இல்லாமல் கிராமத்து காளையாகவும் கலக்கியிருக்கிறார் சூர்யா..

 

சூர்யாவின் இந்த மாஸ் கெட்டப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது..

இப்படத்தின் டீசர் சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை வெளியானது.. இது சூர்யா ரசிகர்கள் கவரும் வகையில் உள்ளது.

இந்த படத்தில் ஒரு காட்சியில் ரஜினி ‘பாட்ஷா’ படத்தில் “என் பேரு மாணிக்கம் எனக்கு இன்னொரு பேர் இருக்கு… என்று சொல்வது போல ‘கருப்பு’ படத்தில் சூர்யா… “என் பெயர் சரவணன்… எனக்கு இன்னொரு பெயர் இருக்கு என்று ரஜினி ஸ்டைலில் டேபிளில் கை வைத்து பேசுவதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது..

Karuppu Teaser launched on Suriya Birthday