LIVE – Madras Matinee கணவன் மனைவி சீன்ஸ் இல்ல.. கண்ணீரில் சட்டையை நனைத்த ரசிகர்கள்.. – காளி வெங்கட்

LIVE – Madras Matinee கணவன் மனைவி சீன்ஸ் இல்ல.. கண்ணீரில் சட்டையை நனைத்த ரசிகர்கள்.. – காளி வெங்கட்

 

LIVE – Madras Matinee கணவன் மனைவி சீன்ஸ் இல்ல.. கண்ணீரில் சட்டையை நனைத்த ரசிகர்கள்.. – காளி வெங்கட்

 

காளி வெங்கட் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் மெட்ராஸ் ‘மேட்னி’.. இந்த படத்தை கார்த்திகேயன் மணி என்பர் அறிமுக இயக்குனர் இயக்கியிருக்கிறார். இதில் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இதில் நாயகியாக நடிகை ஷெல்லி மற்றும் ரோஷினி நடித்துள்ளனர். மேலும் சாம்ஸ் மற்றும் மரியம் சார்ஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்

இந்த படம் கடந்த வாரம் ஜூன் 6ஆம் தேதி வெளியாகி 10 நாட்களைக் கடந்துள்ள நிலையில் இன்று ஜூன் 17ஆம் தேதி சென்னை பிரசாத்தில் படத்தின் வெற்றி விழா நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் காளி வெங்கட் இறுதியாக பேசினார் அவர் பேசும்போது

இந்தப் படத்தின் இயக்குனரை அபிஷேக் அறிமுகப்படுத்தினார்.. அவர் மூலம் படத்தின் கதையை கேட்டதும் எனக்கு பிடித்து விட்டது.. கதையைக் கேட்கும் போது என் அப்பாவின் பரிசத்தை உணர்ந்தேன். அவரின் வாசனையை உணர்ந்தேன்.

இண்டஸ்ட்ரி முழுவதும் மலையாள படங்களை பற்றி அதிகம் பேசிக் கொண்டிருப்பார்கள் இந்த படமும் மலையாள பட சாயலில் இருப்பதாக பலரும் சொன்னார்கள்.. தமிழும் நல்ல படம் வருகிறது..

மலையாள நடிகை ஷெல்லி அற்புதமாக நடித்திருந்தார்.. கணவன் மனைவி அன்னோனியமாக இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.. அதற்கான சீன்கள் இல்லை, நான் என்ன செய்வேன்.

 

இந்தப் படத்தில் சினேகன் பாடல் எழுதி இருக்கிறார். அவருக்கும் நன்றி.. முக்கியமாக நடிகர் வடிவேலு ஒரு பாடலை பாடியிருக்கிறார்.. அவர் நடிக்காத படத்தில் பாடலை பாடி இருப்பதற்காக அவருக்கு நன்றி.

சிறு வயது முதலே சத்யராஜ் படங்களை பார்த்து வளர்ந்திருக்கிறோம்.. அவரின் பல கேரக்டர்களை பார்த்து இருக்கிறோம். இந்த படத்தில் அவரோட நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அவர் இந்த படத்தில் பங்களித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி.

என் மகளாக ரோஷினி நடித்திருந்தார்.. என் அப்பா எனது அக்காவை என்னடா பாப்பா என்று தான் கேட்பார்.. அதுபோல காட்சி வேண்டும் என்று நான் தான் இயக்குனரிடம் சொல்லி கேட்டேன்.. மற்றும் என் பிள்ளைகளால் அடித்தவருக்கும் அனைவருக்கும் நன்றி.

இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் மீடியாவின் பங்கு பெரியது.. இனியும் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.. படத்தை பார்த்த ஒவ்வொருவரும் பாராட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.. இந்த படத்தைப் போல வேறு எந்த படத்திற்கும் எனக்கு இப்படி ஒரு பாராட்டு கிடைத்ததில்லை.

பல நேரங்களில் கண்ணீரே பதிலாக இருந்தது.. ஒரு சிலர் கட்டி அணைத்து பாராட்டும் போது அவர்களின் கண்ணீர் என் சட்டையை நனைத்து விட்டது.. இப்படியாக கிடைத்த பாராட்டு என் வாழ்வில் மறக்க முடியாது.

இந்தப் படத்தைப் பார்த்தவுடன் எஸ் எஸ் ஆர் பிரபு வாங்க நினைத்தார்.. இதனை வெளியிட்ட அவருக்கும் குகனுக்கும் நன்றி..” என்ற நெகிழ்ச்சியாக பேசினார் நடிகர் காளி வெங்கட்.

 

Kali Venkat emotional speech at Madras Matinee thanks event