கன்னட இயக்குநருடன் இணையும் ‘ஒர்க்கர்’-ஸ் ஜெய் & யோகி பாபு

கன்னட இயக்குநருடன் இணையும் ‘ஒர்க்கர்’-ஸ் ஜெய் & யோகி பாபு

 

கன்னட இயக்குநருடன் இணையும் ‘ஒர்க்கர்’-ஸ் ஜெய் & யோகி பாபு

 

சில மாதங்களுக்கு முன் ஜெய் & யோகி பாபு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பேபி அண்ட் பேபி’. இந்த படத்தை தொடர்ந்து ஜெய் நடிப்பில் உருவாகி உள்ள அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது..

அதன்படி இந்த படத்துக்கு WORKER ‘ஒர்க்கர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.. நேற்று மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது..

ரொமான்டிக் ஆக்சன் திரில்லராக உருவாகும் இந்த படத்தை வினய் கிருஷ்ணா இயக்குகிறார்.. இவர் கன்னட சினிமாவில் சீசர் மற்றும் ஹண்டர் ஆகிய படங்களை இயக்கியவர்..

இதில் யோகி பாபு, நாகிநீடு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஷோபனா ராணி தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

சென்னை பாண்டிச்சேரி மங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த படப்பிடிப்பு நடைபெற உள்ளது.. கதாநாயகி தேர்வு நடைபெற்று வருவதால் அது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை..

Jai and Yogibabu starring Worker