‘இந்தியன் 3’ வார் மோட் மீண்டு ஆரம்பம்..; இன்ப அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்
‘இந்தியன் 3’ வார் மோட் மீண்டு ஆரம்பம்..; இன்ப அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்
இந்திய சினிமாவின் பிராண்ட் கமல்ஹாசன் – பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இவர்கள் இருவரும் 1996 ஆம் ஆண்டில் ‘இந்தியன்’ படத்திற்காக இணைந்த போது இந்தியாவே ஆவலுடன் இந்த திரைப்படத்தை எதிர்பார்த்தது..
அதுபோல இந்த படமும் இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்றது.. இதன் தொடர்ச்சியாக 28 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இந்தியன் 2’ திரைப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியானது.. ஆனால் இந்த படம் எதிர்பார்த்து வெற்றியை பெறவில்லை..
ஆனாலும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ‘இந்தியன் 3′ படத்திற்கான சில காட்சிகள் இணைக்கப்பட்ட போது அப்போதே பெரும் எதிர்பார்ப்பு உருவானது..
ஆனால் இந்தியன் 3’ எப்போது ரிலீஸ் என்ற தகவல் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் திடீரென இந்திய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இந்த படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளது லைக்கா நிறுவனம்..
லைகா நிறுவனம் பதிவில், ‘சமரசம் இல்லாத மனநிலையுடன் சேனாதிபதி திரும்பிவிட்டார். ‘இந்தியன் 3: வார் மோட்’ மூலம் அந்த மறுவருகை தொடங்குகிறது’ எனத் தெரிவித்துள்ளது.
இத்துடன போஸ்டரில் கருப்பு வெள்ளை 3 குதிரை மீது அமர்ந்திருக்கும் மூன்று வீரர்கள் புழுதியை கிளப்பியபடி வேகமாக பரந்தவெளியில் பயணிக்கிறார்கள்… நீளமான மூன்று கோடுகள் போல தெரிகிறது.
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கரின் இயக்கிய ‘இந்தியன் 3’ படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்..
மேலும் கமல் ஹாசனுடன் காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரிஷிகாந்த் ஆகியோர் நடிக்கின்றனர்..
விரைவில் இந்தப் படத்தில் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு திரையிட லைக்கா நிறுவனம் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது..
Indian 3 movie war mode news updates

