2026 சட்டமன்றத் தேர்தல்.. எல்லோருக்கும் வீடு.. ஆண்களுக்கும் இலவச பயணம்.; எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதி
2026 சட்டமன்றத் தேர்தல்.. எல்லோருக்கும் வீடு.. ஆண்களுக்கும் இலவச பயணம்.; எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதி.
சில மாதங்களில் அதாவது 2026 மே மாதத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
அதிமுக – திமுக – நாம் தமிழர் கட்சி – தமிழக வெற்றி கழகம் ஆகிய கட்சிகளின் தலைமையில் நான்கு முறை போட்டி நிலவு உள்ளது.. இதில் சில கட்சிகள் மற்ற கட்சிகள் கூட்டணி அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பல கட்சிகளும் பல முன்னணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அதிமுக கட்சி தேர்தல் அறிக்கைகளை ஒவ்வொன்றாக வெளியிட துவங்கியுள்ளது..
இந்த நிலையில் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி..
அம்மா குடியிருப்பு திட்டத்தின் கீழ் மனை வாங்கி, அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும்.. நகர்ப்புறத்தில் அப்பார்ட்மெண்ட் வீடுகள் கிராமப்புறத்தில் தனி வீடுகளும் அனைத்து அமைத்து தரப்படும்..
5 லட்சம் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க, தலா ரூ.25,000 மானியம் வழங்கப்படும்..
ADMK ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்..
ஆண்களுக்கு பேருந்து பயணம் இலவசம். பெண்களுக்கு ஏற்கனவே உள்ள இலவச பேருந்து பயணத் திட்டம் தொடரும்
குலவிளக்கு திட்டத்தின் கீழ் குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும்
Edappadi Palanisamy announced 2026 election manifesto

