போலீஸ் கேரக்டரில் ‘சரண்டர்’ ஆன ‘பிக் பாஸ்’ நடிகர் தர்ஷன்

போலீஸ் கேரக்டரில் ‘சரண்டர்’ ஆன ‘பிக் பாஸ்’ நடிகர் தர்ஷன்

 

போலீஸ் கேரக்டரில் ‘சரண்டர்’ ஆன ‘பிக் பாஸ்’ நடிகர் தர்ஷன்

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தர்ஷன். மேலும் ‘கூகுள் குட்டப்பா’ உள்ளிட்ட படங்களில் நாயகனாகவும் நடித்திருந்தார்.

தற்போது தர்ஷன் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ள படம் ‘சரண்டர்’ இந்த படத்தின் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் அறிவழகன் இணைந்து வெளியிட்டுள்ளனர்..

‘சரண்டர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் க்ரைம் – ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாக விக்டர் குமார் தயாரித்துள்ளார்.. இப்படத்தை கெளதமன் கணபதி இயக்க இவர் அறிவழகனிடம் துணை இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் தர்ஷன், லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு இசையமைப்பாளராக விகாஸ் பதீசா, ஒளிப்பதிவாளராக மெய்யேந்திரன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது..

Dharshan as Police in Surrender movie