3BHK SUCCESS சரத்துடன் இணைஞ்சா ஹிட்டு.. சைத்ரா & மீத்தா என்னை போல சிம்பிள்.. – தேவயாணி
3BHK SUCCESS சரத்துடன் இணைஞ்சா ஹிட்டு.. சைத்ரா & மீத்தா என்னை போல சிம்பிள்.. – தேவயாணி
அருண் விஸ்வா தயாரிப்பில் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் கடந்த வாரம் ஜூலை 4 தேதி வெளியான திரைப்படம் 3BHK.
இதில் சரத்குமார், சித்தார்த், தேவயானி, மீத்தா ரகுநாத், சைத்ரா, சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இந்த படம் குடும்பங்கள் மத்தியில் கொண்டாடப்படும் திரைப்படமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் வெற்றி விழா இன்று ஜூலை 7 தேதி சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குனர் ஸ்ரீகணேஷ், நடிகர்கள் சித்தார்த், சரத்குமார், தேவயானி, சைத்ரா, மீத்தா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்..

விழாவில் தேவயாணி பேசுகையில்…
“நான் 30 வருடங்கள் சினிமாவில் இருக்கிறேன். அருண் விஷ்வா மாதிரியான தயாரிப்பாளரை நான் இப்போதுதான் பார்க்கிறேன்.
தன்னுடைய படைப்பை நேசித்து, நம்பிக்கையோடு கொண்டாட வேண்டும் என்று நினைக்கும் தயாரிப்பாளர் அவர்..
நாம் வன்முறை படங்கள் பார்த்து வருகிறோம். அப்படியான சமயத்தில் ‘3 BHK’ மாதிரியான குடும்பப் படங்கள் வரும்போது மக்கள் கொண்டாடுகிறார்கள்.
நான் தியேட்டர்களில் மக்களின் ரியாக்ஷனைப் பார்ப்பது இதான் முதல் முறை.
எனக்கு சாந்தி கதாபாத்திரத்தைக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. ஶ்ரீ கணேஷை நாம் கொண்டாட வேண்டும். அவர் இதுபோல் நிறையப் படங்கள் பண்ண வேண்டும்.. ஶ்ரீ கணேஷ் நல்ல எழுத்தாளர் மற்றும் இயக்குநர்.
சரத் சாருடன் நான் இணைந்து நடித்த படங்கள் எல்லாமே ஹிட் படங்கள்.
என்னுடன் நடித்திருக்கும் சைத்ரா, மீதா ஆகியோர் என்னைப் போலவே ரொம்ப சிம்பிளாக இருக்கிறார்கள். அவர்களைப் போன்ற நடிகைகள் தான் நமக்குத் தேவை.
சித்தார்த் படங்கள் வித்தியாசமானவையாகவே இருக்கும். அவர் இயக்குனர் துறை பக்கத்திலிருந்து வந்தவர் என்பதால் அத்தனை விஷயங்களையும் கவனிப்பார்.” என்று பேசினார் தேவயாணி..

நடிகர் சரத்குமார் பேசும்போது..
சித்தாரத்தை கிண்டல் அடித்துப் பேசிக் கொண்டிருந்தார்.. மேலும் நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார் சரத்குமார்.
மேலும் கையில் கட்டி இருந்த கடிகாரத்தை இசையமைப்பாளர் விரும்பியதால் மேடையில் கழற்றி அவருக்கு பரிசாக வழங்கினார்.
இந்தப் படத்திற்கு மிகவும் உயிர் கொடுத்தது லைஃப் கொடுத்தது என்றால் அதை இசைதான்.. கிளைமாக்ஸ் காட்சியில் மிக பிரம்மாண்டமான ஒரு கட்டிடம் காட்டப்படும்.. அதில் இசையை ஒலிக்காமல் வெறும் காற்றை மட்டும் ஒலிக்க விட்டு இருந்தார்.. அதுதான் அந்த படத்திற்கு ஒரு உயிரோட்டத்தை கொடுத்தது.
இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இருக்கும் இடமே தெரியாது.. குருதி ஆட்டம் படப்பிடிப்பின் போது அதில் ராதிகா நடித்துக் கொண்டிருந்தார்.. நான் அப்போது அந்த அரங்கத்திற்கு சென்றிருந்தேன்.. இயக்குனரை தேடிக் கொண்டிருந்தேன்..
அவர் எங்கும் தென்படவில்லை.. மானிட்டர் அருகே ஒருவர் மிகவும் நெளிந்த படி அமர்ந்திருந்தார் அவர்தான் ஸ்ரீ கணேஷ்.. ஷூட்டிங் செட்டில் அவர் சத்தம் போட்டு பேச மாட்டார்.. ஆனால் அவர் சத்தம் போட்டால் யாருமே பேச மாட்டார்கள்.. ” என்று கலகலப்பாக பேசினார் சரத்குமார்..
Actress Devayani emotional speech at 3BHK success meet

