BOX OFFICE GOD RAJINI – 120 ஆண்டு தமிழ் சினிமாவில் ‘ஜெயிலர் 2’ ரெக்கார்டு
BOX OFFICE GOD RAJINI – 120 ஆண்டு தமிழ் சினிமாவில் ‘ஜெயிலர் 2’ ரெக்கார்டு
இந்திய சினிமாவில் மூன்று மொழி திரைப்படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.. தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய படங்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் இருக்கும்..
சமீபத்தில் பெத்தலகேம் குடும்ப யூனிட் என்ற மலையாளத் திரைப்படம் ₹ 320 கோடியே வசூலித்துள்ளது. எனவே தற்போது மலையாள திரையுலகிலும் 500 கோடியை இலக்காக வைத்து மலையாள படங்கள் தயாரிப்பு தயாராகி வருகிறது..
www.rightnewsraja.com
சமீபகாலமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் கன்னட படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.. இதற்கு முக்கிய காரணம் கே ஜி எஃப் மற்றும் காந்தாரா உள்ளிட்ட படங்களை சொல்லலாம்..
இதன்படி வசூல் வேட்டையில் இந்திய அளவில் ஹிந்தி படங்கள் இதுவரை 4 படங்கள் ஆயிரம் கோடியை கடந்துள்ளது.. தெலுங்கு சினிமாவை பொருத்தவரை 4 படங்கள் இந்திய அளவில் ஆயிரம் கோடியே கடந்துள்ளது.. கன்னட சினிமாவில் இரண்டு படங்கள் ஆயிரம் கோடியை கடந்து வசூல் வேட்டையாடி உள்ளது..
www.rightnewsraja.com
ஆனால் இதுவரை தமிழ் சினிமாவில் எந்த திரைப்படங்களும் ஆயிரம் கோடி கடந்து வசூல் சாதனை செய்ததில்லை.
ரஜினி இதுவரை 3 முறை 500 கோடி சாதனையை படைத்திருந்தாலும் ரஜினியால் கூட இதுவரை ஆயிரம் கோடியை தாண்ட முடியவில்லை.. ரஜினி சங்கர் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவான 2.0 படம் ₹ 800 கோடியை கடந்து இருந்தது.
தற்போது ஜெயிலர் 2 படம் அந்த வசூலை நெருங்கி வருகிறது.. படம் வெளியாகி இதுவரை 10 நாட்களை கடந்து உள்ள நிலையில் கிட்டத்தட்ட ₹ 700 கோடியை வசூலித்து வருகிறது..
இதுவரை 120 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் எந்த திரைப்படமும் ஒரே வாரத்தில் 600 கோடியை தொட்டதில்லை.. இந்த சாதனையை ரஜினிகாந்த் படைத்திருக்கிறார் என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெருமையான நிகழ்வாகும்..
www.rightnewsraja.com
இன்னும் (டிசம்பர் 8) தீபாவளிக்கு இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் ஜெயிலர் 2 திரைப்படம் தற்போதும் திரையரங்குகளில் அரங்கில் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.. குழந்தைகளும் குடும்ப குடும்பமாக வந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்..

எனவே இந்த படம் விரைவில் ₹1000 கோடியை தொடும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. மேலும் திரைப் பிரபலங்கள் தனஞ்செயன் & விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் விரைவில் ஆயிரம் கோடியை வசூலித்து விடும் ஜெயிலர் 2 என தெரிவித்து வருகின்றனர்..
மேலும் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலைப்புலி தாணு ரஜினியை வசூல் கடவுள் BOX OFFICE GOD எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.. இதுவும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது..
Box Office GOD Rajini and Jailer2 will make recird break in Tamil Cinema
—

