அர்ஜுன் & பி.வாசு உள்ளிட்டோருக்கு MGR பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம்

அர்ஜுன் & பி.வாசு உள்ளிட்டோருக்கு MGR பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம்

 

 

அர்ஜுன் & பி.வாசு உள்ளிட்டோருக்கு MGR பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம்

 

 

டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைகழத்தின் 38வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் 4 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு பட்டம் அவர்கள் பெற்றோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.

இந்த விழாவுக்கு பல்கலைகழக நிறுவன வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமை தாங்கினார்.

மேலும் பல்கலைகழக சேர்மன் ஏ.சி.எஸ்.அருண்குமார் முன்னிலை வகித்தார். செகரட்டரி ஏ.ரவிகுமார், துணை வேந்தர் எஸ்.கீதாலட்சுமி முன்னிலை வகித்தனர்.

மத்திய அமைச்சர் எல்.முருகன் மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்த விழாவில் விஞ்ஞானியும், இந்திய ராணுவ ஆராய்ச்சி நிறுவன தலைவருமான ஜி.ஏ.சீனிவாச மூர்த்தி, நடிகர் அர்ஜுன், இயக்குனர் பி.வாசு ஆகியோருக்கு அவர்களது சேவையை பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

நடிகர் அர்ஜுன் ஆங்கிலத்தில் பேச இயக்குனர் பி வாசு தமிழில் பேசினார்..

Arjun and Vasu received Doctorate at MGR university

 

 

 

 

 

Related articles