JUST IN எப்பவும் சண்டை போடுறேன்னு சாயிஷா சொல்வாங்க..; ராஜா ராணி’-க்கு அப்புறம் ‘ஹலோ காதல்’… – ஆர்யா

JUST IN எப்பவும் சண்டை போடுறேன்னு சாயிஷா சொல்வாங்க..; ராஜா ராணி’-க்கு அப்புறம் ‘ஹலோ காதல்’… – ஆர்யா

 

 

எப்பவும் சண்டை போடுறேன்னு சாயிஷா சொல்வாங்க..; ராஜா ராணி’-க்கு அப்புறம் ‘ஹலோ காதல்’… – ஆர்யா

 

 

தமிழ் சினிமாவில் பிளேபாய் என்ற சொன்னால் அது ஆர்யா என்ற பெயர் இருந்து வந்தது.. ஆனால் சமீப காலமாக மற்ற ஹீரோக்களை போல இவரும் ஆக்ஷன் ரூட்டில் பயணித்து வருகிறார்..

இந்த நிலையில் தற்போது மீண்டும் பழைய ரூட்டில் அதாவது ரொமான்டிக் ரூட்டில் பயணிக்கிறார் நடிகர் ஆர்யா..

நடிகர் ஆர்யா உடன் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் ‘ஹலோ காதல்’ மேலும் முரளி சர்மா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தமிழில் ‘ஹலோ காதல்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘ஹலோ பிரேமா’ என்ற பெயரிலும் இப்படம் வெளியாகிறது. இப்படத்தின் பாடல்களான ‘கண்ணும் கண்ணும்’ மற்றும் ‘நிறைவே’ ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன..

மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘பிரணய விலாசம்’ படத்தை இயக்கிய நிகில் முரளி இப்படத்தை இயக்கியுள்ளார். சுனு ஏ.வி. மற்றும் ஜோதிஷ் எம். கதை எழுத, இயக்குநர் ஹலிதா ஷமீம் கூடுதல் திரைக்கதை மற்றும் தமிழ் வசனங்களை எழுதியுள்ளார்..

www.rightnewsraja.com

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பினு நெப்போலியன் படத்தொகுப்புப் பணிகளையும், ஏ.ஆர். மோகன் கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளனர்..

ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான The Show People மற்றும் சில்வர் கிரெய்ன் பிக்சர்ஸ் (Silver Grain Pictures) ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.

அடுத்த டிசம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இந்தப் படத்தில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நவம்பர் 23ஆம் தேதி சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது..

www.rightnewsraja.com

இதில் நடிகர் ஆர்யா பேசும்போது…

எல்லோருக்கும் வணக்கம் இந்த மழையிலும் வந்திருக்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் என் நன்றி.. சமீபகாலமா நிறைய ஆக்ஷன் படங்கள் பண்ணிட்டு இருக்கேன்.. வீட்ல (சாயிஷா) கேப்பாங்க.. எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருக்கே.. லைட்டான Soft படம் பண்ணுன்னு சொல்லுவாங்க..

டைரக்டர் ஜீவா இருந்திருந்தா உள்ளம் கேட்குமே மாதிரி பத்து படங்கள் இந்நேரம் பண்ணி இருப்பேன்.. அவர் அப்பவே 12B ஒரு வித்தியாசமான படம் பண்ணி இருந்தால்..

ஒருமுறை கேரளா சென்று இருந்த போது இந்த படத்தின் இயக்குனர் இந்த படத்தின் கதையை சொன்னார்.. இப்ப இருக்கிற ஆடியன்ஸ்க்கு இந்த படம் ரொம்ப கனெக்ட் ஆகும்.. அப்படி ஒரு கதை.. ராஜா ராணிக்கு அப்புறம் இப்பதான் ஒரு சாப்டான கதை பண்றேன்.. அதற்காக டைரக்டர் நிகிலுக்கு நன்றி..

www.rightnewsraja.com

இந்தப் படத்தை கன்ஃபார்ம் செய்தவுடன் ஜி வி பிரகாஷுக்கு போன் செய்தேன் மச்சான் இந்த இந்த கதைக்கு மியூசிக் போட்டு குடு என்று சொன்னேன்… அவரும் நன்றாக இசையமைத்துள்ளார்..

டைரக்டர் நிகில் அவருக்கு மலையாளத்தில் தான் கதை சொன்னார் அப்புறம் லலிதா வச்சு தமிழ் டயலாக் சொன்னேன்.. ஜிவி பிரகாஷ் 15 படத்துக்கு மியூசிக் பண்றாரு அதுல 10 படம் நடிக்கிறாரு.. 5 படம் புரொடியூஸ் பண்றாரு.. ரொம்ப பிசியா இருந்தாலும் எங்க குழுவில் இருந்து யார் போன் செய்தாலும் அடுத்து 5 நிமிடத்தில் ரிப்ளை செய்து விடுவார்.. ஆனால் சிலருக்கு மெசேஜ் செஞ்சா ரிப்ளை வர 3 நாள் ஆகும்.. ஆனால் ஜீவி அப்படி கிடையாது.. எனக்கு பர்சனல் ஃபேவரைட் அவர்தான்.. நன்றி..

இந்தப்படம் டெக்னிக்கலா ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு ஒரு பீல் குட் மூவியா வந்துருக்கு.. டிசம்பர் 4 தேதி இந்த படம் ரிலீஸ் ஆகுது… எல்லாரும் பார்த்து சப்போர்ட் பண்ணுங்க.. ” என்று பேசினார் ஆர்யா..

 

 

After Raja Rani my feel good movie Hello Kadhal says Arya

—

‘