டாஸ்மாக்கை மூடு.. நீட் தேர்வு ரத்து.. மாதம் ஒருமுறை மின் கட்டணம்..; விஜய் கட்சி தீர்மானங்கள்
டாஸ்மாக்கை மூடு.. நீட் தேர்வு ரத்து.. மாதம் ஒருமுறை மின் கட்டணம்..; விஜய் கட்சி தீர்மானங்கள்
இன்று நவம்பர் மூன்றாம் தேதி விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பட்டியல் இதோ…
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுவில் 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்
– ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன தீர்மானம்
– நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்
– கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்
– சில மாநிலங்களில் மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகையில், மத்திய அரசை காரணம் காட்டி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருக்கும் மாநில அரசுக்கு எதிர்ப்பு.
– மாதம் ஒருமுறை மின் கட்டண அளவீடு செய்யப்படும் என்று கூறிவிட்டு, அதை நடைமுறைப்படுத்தாமல் இருக்கும் தமிழக அரசுக்கு கண்டனம்
_ கால வரையறை நிர்ணயம் செய்து மது கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானம்
இவை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்..
Actor Vijays TVK party meeting today

