விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ ரிலீஸ் தெலுங்கில் தள்ளி வைப்பு.; ராஜமவுலி தான் காரணம்.!
விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ ரிலீஸ் தெலுங்கில் தள்ளி வைப்பு.; ராஜமவுலி தான் காரணம்.!
விஷ்ணு விஷாலின் கிரைம் திரில்லர் படம் ‘ஆர்யன்’. இந்த திரைப்படத்தை பிரவீன் கே இயக்கி உள்ளார். இதில் விஷ்ணு விஷால் மீண்டும் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார்..
இதில் செல்வராகவன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், கருணாகரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்..
ஜிப்ரான் இசையமைக்க இப்படம் விஷ்ணு விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது..
மம்முட்டியின் நடித்த “கண்ணூர் ஸ்குவாட் ‘ எனக்கு பிடித்த படம். உண்மையில், ஆர்யனின் சில காட்சிகள் கண்ணூர் ஸ்குவாடிலிருந்து ஈர்க்கப்பட்டவை,” என சமீபத்தில் ஒரு பேட்டியில் விஷ்ணு விஷால் தெரிவித்து இருந்தார்..
வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்நிலையில், தெலுங்கு ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தெலுங்கு பதிப்பு நவம்பர் 7-ம் தேதி திரைகளில் வெளியாக உள்ளது..
ரவி தேஜாவின் மாஸ் ஜதாரா மற்றும் எஸ்.எஸ். ராஜமவுலியின் பாகுபலி: தி எபிக் ஆகிய படங்கள் 31-ம் தேதி வெளியாக உள்ளதால் விஷ்ணு விஷால் இந்த முடிவை எடுத்துள்ளார்..
ரவி தேஜா -ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ் ஜதாரா திரைப்படம் வருகிற 31 ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
மேலும் ராஜமௌலி இயக்கிய பாகுபலி 1 மற்றும் 2 ஆம் பாகங்கள் ஒரே படமாக இணைக்கப்பட்டு அக்டோபர் 31 அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Vishnu Vishals Aaryan release postponed in Telugu

