அண்ணன் எப்பவுமே ஸ்பெஷல்.; விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா பட விழாவில் கார்த்தி பேச்சு

அண்ணன் எப்பவுமே ஸ்பெஷல்.; விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா பட விழாவில் கார்த்தி பேச்சு

 

அண்ணன் எப்பவுமே ஸ்பெஷல்.; விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா பட விழாவில் கார்த்தி பேச்சு

 

நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா கதை நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’.

கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ளத.. நாயகியாக மிதிலா பால்கர் நடிக்க இவர்களுடன் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஜென் மார்ட்டின் என்பவர் இசையமைத்துள்ளார்.

படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இணைந்து தயாரித்துள்ளனர்.

இதில் உதவி இயக்குனராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குனராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கு கதை சொல்கிறார். இதுவே படத்தின் கதைகளமாக தெரிகிறது..

 

ஜூலை 11 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. ம் எனவே படத்தின் டிரெய்லர் வெளியீடு விழா சென்னையில் நடைப்பெற்றது..

 

அதில் கார்த்தி, வெற்றி மாறன், அஷ்வத் மாரிமுத்து, ஏ.ஜி.எஸ் அர்ச்சனா மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

அதில் கார்த்தி பேசும்போது… ” ஒரு அண்ணன் இருப்பது எப்போதும் ஸ்பெஷல் தான், அப்பா கையில் தூக்கி வளர்த்தார் என்றால் அண்ணன் தோளில் தூக்கி வளர்ப்பார். அந்த வகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி..

 

என் அண்ணாவை பார்த்து நிறைய கற்று கொண்டேன். நான் திரைத்துறையில் அறிமுகம் ஆகும் போது என்னை மிகவும் அன்போடு வரவேற்று திரைத்துறை மக்கள் வாழ்த்தினர். அந்த அன்பு திரைத்துறையில் நுழையும் அனைவருக்கும் நாம் பகிர வேண்டும் அந்த ஒரு காரணத்திற்காக தான் நான் இங்கு வந்துள்ளேன்” என பேசினார் கார்த்தி..

மேலும் தம்பியை அறிமுகப்படுத்தி நடிகர் விஷ்ணு விஷாலும் வாழ்த்தி பேசினார்.. தனக்கு கொடுத்த ஆதரவை போல தன்னுடைய தம்பிக்கும் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்..

அது போல நாயகன் ருத்ரா பேசும் போது… அண்ணன் இல்லையென்றால் நான் இங்கு நிற்க முடியாது.. அவர் எனக்கு எல்லா விதத்திலும் உதவி வருகிறார்.. அவரிடம் நான் நேரில் சொல்லாத ஒன்றை இப்போது உங்கள் முன் சொல்கிறேன் ஐ லவ் யூ அண்ணா என்று நெகிழ்ச்சியாக பேசினார் ருத்ரா…

Karthi emotional speech at Oho Endhan Baby event

 

Related articles