நிழற்குடை விமர்சனம்.. அன்பிற்குடை
நிழற்குடை விமர்சனம்.. அன்பிற்குடை
ஸ்டோரி…
விஜித் கண்மணி தம்பதிக்கு ஒரு குழந்தை இருக்கிறது.. அந்த குழந்தையை பார்த்துக் கொள்ளும் பணி பெண்ணாக வேலைக்கு சேர்கிறார் தேவயானி.
ஒரு கட்டத்தில் விஜித் அமெரிக்காவில் சென்று குடியேற இருக்கும் சூழ்நிலையில் அந்த குழந்தை தேவயானியை விட்டு பிரிய மறுக்கிறது… இதனிடையில் குழந்தையும் காணாமல் போகிறது.. கடத்தியவர் யார்.?
இதன் பிறகு என்ன நடந்தது என்பதெல்லாம் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்..
தனக்குப் பிறக்காத குழந்தையாக இருந்தாலும் பொறுப்பான அம்மாவாக வாழ்ந்திருக்கிறார் தேவயாணி..
குழந்தை மீது தேவயாணி காட்டும் அன்பும், அக்கறையும் ரசிக்க வைக்கிறது..
இளம் தம்பதியாக விஜித் & கண்மணி நடிப்பில் ஓகே.. குழந்தையாக நடித்த சிறுமி ஜி.வி.அஹானா அஸ்னி மற்றும் நிஹாரிகா இருவரது நடிப்பும் நம்மை ஈர்க்கும் ரகம்..
இவர்களுடன் ராஜ்கபூர், இளவரசு, வடிவுக்கரசி, நீலிமா ராணி ஆகியோரது நடிப்பு படத்திற்கு பலம்.
தர்ஷன் சிவாவின் காட்சிகள் செம..

டெக்னீசியன்ஸ்…
குருதேவ் – ஒளிப்பதிவு
நரேன் பாலகுமார் – இசை
பாடல்களும் ஒளிப்பதிவும் பின்னணி செய்யும் படத்தொகுப்பம் படத்திற்கு கூடுதல் பலம் கொடுத்துள்ளது.. அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்..
ஒரு பக்கம் முதியோர் இல்லம் ஒரு பக்கம் குழந்தைகள் காப்பகம் என்று அதிகரித்து வரும் நிலையில் இன்றைய சமூகத்திற்கு தேவையான பாடத்தை சொல்லிக் கொடுக்கும் படம் தான் இந்த நிழற்குடை..
தயாரிப்பு : தர்ஷன் பிலிம்ஸ்
இயக்கம் : சிவ ஆறுமுகம்
வேலை வேலை என்று பிசியாகிவிட்ட இளம் தம்பதியர்களுக்கு தேவயானி மூலம் அழகான வாழ்க்கை பாடம் சொல்லி இருக்கிறார் ‘நிழற்குடை’ இயக்குனர் சிவ ஆறுமுகம்.
Nizharkudai movie review

